Friday, August 9, 2013

பகோடா வத்தல்

தேவையானவை
ஜவ்வரிசி - 2 கப்
அரிசிமாவு -2 கப்
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் -10
சோம்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடியளவு
இஞ்சி - 1 பெரிய துண்டு

செய்முறை:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+புதினா கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*அரிசிமாவு+ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*தண்ணீர் கொதித்ததும் பொடியாக அரிந்த பொருட்கள்+உப்பு+ஜவ்வரிசி+அரிசிமாவு சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை கொஞ்ச கொஞ்சமா கிள்ளி வைக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.பொரிக்கும் போது பகோடா பொரித்தது போல் வாசனையாக இருக்கும்.

பி.கு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.

Thursday, August 8, 2013

கம்பு தோசை



தேவையான பொருட்கள்:
கம்பு - 3 கப்
உளுந்து - ½ கப்
வெந்தயம் - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. கம்பு, உளுந்து, வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி 7 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. ஊறிய பின்பு கிரைண்டரில் நன்றாக அரைத்து, உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளவும்.

3. இந்த மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.

மிக்க மணம் கொண்ட இந்த கம்பு தோசையை சட்னி சேர்த்து பரிமாறவும்.

பா‌ல் ப‌ணியார‌ம்


தேவையானவை

பச்சரிசி - 100 கிராம்
உளுந்து - 75 கிராம்
பால் - 200 கிராம்
தேங்காய் பால் - ஒரு டம்ளர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் பொடி - சிறிதளவு

செய்முறை: 

பாலைக் காய்ச்சி, இறக்குகிற சமய‌த்‌தி‌ல் தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். அதில் சர்க்கரை, ஏல‌க்கா‌ய் பொடி சேர்க்கவும்.

பச்சரிசியையும், உளுந்தையும் 5 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மைய அரைக்கவும்.

இந்த மாவை சிறிய உருண்டைகளாக உரு‌ட்டி வை‌க்கவு‌ம்.

இ‌ட்‌லி கு‌ண்டா‌னி‌ல் ஒரு த‌ட்டை ம‌ட்டு‌ம் வை‌‌த்து அ‌தி‌ல் வெ‌ள்ளை‌த் து‌ணியை‌ப் போ‌ட்டு உரு‌ட்டிய உரு‌ண்டைகளை வை‌த்து ஆ‌வி ‌க‌ட்டி இற‌க்கவு‌ம். 

ஆ‌வி‌யி‌ல் வெ‌ந்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும்.

சுவையான பால் பணியாரம் தயார்.

பிரெட் மசாலா


தேவையான பொருட்கள்

பிரெட், பட்டர். (பிரெட்டின் மேல் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்யவும்).
மசாலா செய்ய...
கொண்டைக் கடலை - 200 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 2
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - தலா 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றி, முதலில் பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகுத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா இவற்றை சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும். இந்த கிரேவியை டோஸ்ட் செய்த பிரெட்டின் இடையில் வைத்து பரிமாறவும்.

அவல் லட்டு


தேவையானப் பொருட்கள்: 

அவல் 1 கிலோ
சர்க்கரை 1 கிலோ
ரோஸ் வாட்டர் தேவையான அளவு
நிலக்கடலைப் பருப்பு 200 கிராம் 

செய்முறை: 

அவலில் கலந்துள்ள அசுத்தங்களை முதலில் அகற்றவும். கற்களை நீக்கவும். 

பிறகு ஒரு சுத்தமான துணியை வெயிலில் விரித்துப் போட்டு அதன் மேல் அவலை பரவலாகப் பரப்பவும். 

நன்கு காய்ந்த பிறகு அதை எடுத்து வைத்துக் கொள்ளவும். 

வாணலியை அடுப்பில் வைத்து நிலக்கடலைப் பருப்பை லோசாக வறுத்து எடுத்து தேய்த்துப் புடைத்து நன்கு சுத்தம் செய்து சொத்தைப் பருப்புகளை அகற்றவும். 

சர்க்கரையை பாகு காய்ச்சி அதில் முதலில் அவலைச் சேர்க்கவும். நன்கு கிளறிய பிறகு நிலக்கடலைப் பருப்பை போட்டு மீண்டும் கிளறவும். 

அதன்பிறகு ரோஸ் வாட்டர் தேவையான அளவு சேர்த்துக் கிளறவும். 

அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறுவதற்கு முன்னதாக லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும். 

அவ்வளவுதான் அவல் லட்டு தயார்.

முட்டைகேக்


தேவையானவை

முட்டை - 4
மைதா - 1 கப்
வெனிலா எசன்ஸ் - அரை தே‌க்கர‌ண்டி
பொடித்த சர்க்கரை - அரை க‌ப் 
பேக்கிங் பவுடர் - 1/2 தே‌க்கர‌ண்டி
செய்முறை: 

முட்டைகளை நுரை பொங்கக் கடையவும். இதில் சர்க்கரைத் தூளைச் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

மாவையும், பேக்கிங் பவுடரையும் சலித்துக் கொண்டு, முட்டைக் கலவையில் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும். எசன்ஸ் சேர்க்கவும்.

ஒரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் லேசாக மைதா மாவைத் தூவவும்.

இதில் கேக் கலவையை விட்டு, 7 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைத்து, பேக் மோட்டில் வேக விடவும்.

ஆறிய பின் த‌னியாக எடு‌த்து தேவையான வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டவு‌ம்.

ஆ‌ப்‌பி‌ள் ர‌ப்டி


தேவையானவை

ஆ‌ப்‌பி‌ள் - 2
பா‌ல் - 2 ‌க‌ப்
மு‌ந்‌தி‌ரி - 10
‌பி‌ஸ்தா - 10
பாதா‌ம் - 10
ச‌ர்‌க்கரை - 2 க‌ப்

செய்முறை: 

அடு‌ப்‌பி‌ல் பாலை வை‌த்து சு‌ண்ட‌க் கா‌ய்‌ச்சு‌ங்க‌ள். 

பா‌ல் சு‌ண்டுவத‌ற்கு‌ள் ஆ‌ப்‌பிளை ‌நறு‌க்‌‌கி ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். அ‌ல்லது தே‌ங்கா‌ய் ‌சீவ‌லி‌ல் வை‌த்து ‌‌சீ‌வி‌க் கொ‌ள்ளலா‌ம்.

பா‌‌ல் சு‌ண்டி 1 க‌ப் ஆனது‌ம் அ‌தி‌ல் ச‌ர்‌க்கரையை‌ப் போ‌ட்டு கல‌க்‌கி ‌விடவு‌ம். 

ச‌ர்‌க்கரை ந‌ன்கு கரை‌ந்தது‌ம் ஆ‌ப்‌பிளை‌ப் போ‌ட்டு கல‌க்கவு‌ம்.



பாதா‌மி‌ன் தோலை உ‌ரி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். பாதா‌ம், ‌பி‌ஸ்தா, மு‌ந்‌தி‌ரி ஆ‌கியவ‌ற்றை அரை ம‌ணி நேர‌ம் பா‌லி‌ல் ஊறவை‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் ஒ‌ன்று‌ம் பா‌தியுமாக அரை‌த்து வேகு‌ம் ஆ‌ப்‌பி‌ளி‌ல் சே‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ளவு‌ம்.

‌ஆ‌ப்‌பி‌ள் ர‌ப்டி தயா‌ர். அதனை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் எடு‌த்து ப‌ரிமா‌றி அல‌ங்க‌ரி‌க்கவு‌ம்.

காளான் வடை



தேவையானவை: பட்டன் காளான் - அரை கிலோ, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: கடலைப்பருப்பையும் வேர்க்கடலையையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பாதி அரைக்கும்போது, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பிறகு, காளானை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உப்புத் தண்ணீரில் அலசவும். வெறும் கடாயில் காளானைப் போட்டு வதக்கவும். அதில் இருக்கும் தண்ணீர் வற்றி காளான் சுருண்டு வந்ததும் இறக்கி, அரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் சேர்க்கவும். இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்... சுவையான காளான் வடை ரெடி!
வேர்க்கடலையை ஊற வைத்து அரைக்காமல், மிக்ஸியில் கொரகொரவெனப் பொடித்துப் போட்டால் வடை 'க்ரிஸ்பி’யாக இருக்கும்.

பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை, ரவை - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ரவையையும், சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன், உப்பு, அரைத்த ரவை - சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொஞ்சம் கனமானக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.
குறிப்பு: மாவு பிசைந்தவுடனே பூரி செய்தால் எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.

மட்டன் சுக்கா

தேவையானவை: மட்டன் - 1/2 கிலோ, தயிர் - 1/2 கப், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒன்றரை ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் - 1 கப், சீரகத்தூள் - 1/2 ஸ்பூன், எண்ணெய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மட்டனை நன்றாகக் கழுவிய பின், மிளகாய்த்தூள், தயிர், இஞ்சி - பூண்டு பேஸ்ட், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன் நிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் மட்டன் கலவையை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். பின் அதைக் குக்கரில் போட்டு, மூன்று விசில் விட்டு இறக்கவும். குக்கரைத் திறந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். சுவையான மட்டன் சுக்கா ரெடி !

மசாலாக் கடலை

தேவையானவை

உரித்த வேர்க்கடலை - 1 கப்
மிளகாய்த்தூள் - தேவையான அனவு
எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி
கடலை மாவு - 2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: 

வே‌ர்‌க்கடலையை வேக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். 

வேக வை‌த்த வே‌ர்‌க்கடலையுட‌ன் கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைக் கலந்து 10 ‌நி‌மிட‌ம் ஊற ‌விடவு‌ம்.

ஒரு வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம் மசாலா ஊ‌றிய வே‌ர்‌க்கடலையை‌க் கொ‌ட்டி ந‌ன்கு ‌கிளறவு‌ம்.

‌மிளகா‌ய் தூ‌ள் வாசனை போன ‌பிறகு, வே‌ர்‌க்கடலையுட‌ன் மசாலா‌க் கலவை ந‌ன்கு ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் வரை ‌பிர‌ட்டி இற‌க்கவு‌ம்.

சூடாக சா‌ப்‌பிடவு‌ம்.

முழு எலுமிச்சை ஊறுகாய்

 
தேவையானவை: சிறிய எலுமிச்சம்பழம் - 10, வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை கப், கடுகு, பெருங்காயம் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: எலுமிச்சம் பழங்களை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கொதிக்கும் நீரை பழங்கள் மூழ்கும் அளவுக்கு விட்டு மூடவும். 10 நிமிடம் கழித்து வெளியே எடுத்து, கத்தியால் நான்காக கீறி, உப்பு, மிளகாய்தூள், வெந்தயத்தூள் கலந்து அடைக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். ஒரு வாரம் கழித்து உபயோகப்படுத்தவும்

கடுகு-எலுமிச்சை ஊறுகாய்

 
தேவையானவை: எலுமிச்சை துண்டுகள் - 2 கப், கடுகுத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் கப், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு ஜாடியில் போட்டு, மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணை விடவும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்தலாம்.

கார நார்த்தங்காய் ஊறுகாய்

 
தேவையானவை: நார்த்தங்காய் துண்டுகள் - 2 கப், காய்ந்த மிளகாய் - 10, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மிளகாய், வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். இந்தப் பொடியை நார்த்தங்காய் துண்டுகளின் மேல் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, ஊறியதும் பயன்படுத்தவும். 
இந்த ஊறுக்காய் தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.

வடு மாங்காய்

 
தேவையானவை: ருமானி (அ) கிளிமூக்கு பிஞ்சு மாங்காய் - 2 கப், கடுகு, மிளகாய்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, விளக்கெண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மாங்காயை நன்றாகக் கழுவி, துடைத்து, விளக்கெண்ணெயை தடவவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, ஜாடியில் போட்டு வைக்கவும். இரண்டு நாளுக்கு ஒரு முறை குலுக்கி விடவும். நன்றாக ஊறியதும் உபயோகப்படுத்தவும்.