Tuesday, December 17, 2013

வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு

 தேவையான பொருட்கள்:
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக கீறியது)
சிறிய உருளைக்கிழங்கு - 1/2 கிலோ 
வெந்தயக் கீரை - 250 கிராம் (நன்கு கழுவி நறுக்கியது)
 மல்லி தூள் - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
செய்முறை: 
முதலில் சிறிய உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்கி, தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வெந்தயக்கீரையை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் கீரை நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து, வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு தயார் .

கற்பூரவள்ளி டீ

 
 தேவையான பொருட்கள்: 
உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1 1/2 டீஸ்பூன் 
தண்ணீர் - 1 கப் 
தேன் - தேவையான அளவு 
 செய்முறை: 
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீரை கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் கற்பூரவள்ளி இலையைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த இலையை நீக்கி விட்டு, அதனை மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். பின் அதில் தேவையான அளவு தேனை சேர்த்து கலந்தால், சுவையான கற்பூரவள்ளி டீ தயார் .
குறிப்பு:
 உலர்ந்த கற்பூரவள்ளி இலையை அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் போதே போட வேண்டாம். இல்லாவிட்டால், அது டீயின் சுவையையே மாற்றிவிடும். ஒருவேளை உலர்ந்த கற்பூரவள்ளி இலை கிடைக்காவிட்டால், பச்சை இலையை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, தேன் சேர்த்து குடிக்கலாம்.
குளிர்ச்சியான வானிலையின் போது, நன்கு சூடாகவும், உடலுக்கு இதமாகவும் இருக்க டீ போட்டு குடித்தால் நன்றாக இருக்கும். அதிலும் சாதாரண பால் டீயை விட, மூலிகை டீ போட்டு குடித்தால், குளிர்ச்சியான வானிலையின் போது ஏற்படும் இருமல், சளி போன்றவை வராமல் இருக்கும். அதிலும் அக்காலத்தில் இருமலைப் போக்கப் பயன்படும் கற்பூரவள்ளியைக் கொண்டு டீ போட்டு குடித்தால், இன்னும் நன்றாக இருக்கும்.இருமலைப் போக்கும்.

கம்பு ஆலு ரொட்டி

தேவையான பொருட்கள்: 
 கம்பு மாவு - 2 கப் 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
 தேங்காய் - 1/2 கப் (துருவியது) 
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
 மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 1 கப் 
 செய்முறை: 
முதலில் ஒரு பௌலில் கம்பு மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய், மாங்காய் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், ஒவ்வொரு சப்பாத்திகளையும் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது சூப்பரான கம்பு ஆலு ரொட்டி ரெடி.இதனை அப்படியே சாப்பிடலாம்