Wednesday, January 29, 2014

காளான் கோஸ் கறி

தேவையானவை :
காளான்  - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை :
காளான்  மற்றும் கோஸை நறுக்கி உப்பு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் காளான்  , கோஸ் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு தூள் வகைகள் சேர்க்கவும். தண்ணீர் விடாமல் காளான்  சுருள வேகும் வரை வேகவிட்டு, கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

காய்கறி வெண்ணெய் தோசை

தேவையான பொருட்கள் :
தோசை மாவு - ஒரு கப்
காலிஃப்ளவர் - பாதி அளவான பூ
காரட் - 2
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய வெண்ணெய் துண்டுகள் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :
காலிஃப்ளவரை சிறிதாக உதிர்த்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைக்கவும். உருளைக்கிழங்கை நீளமான வடிவில் நறுக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். காலிஃப்ளவர், காரட், பட்டாணி ஆகியவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (அனைத்து காய்களையும் கிழங்கு உட்பட - இட்லி தட்டில் ஒரே தட்டில் வேகவைத்து எடுக்கலாம்).
அடுப்பில் தோசைக் கல்லை காயவைத்து, தோசை மாவை எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றவும். (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
வேக வைத்த காய்கறிகளையும், நறுக்கிய தக்காளியையும் தோசை மேல் தூவி அலங்கரிக்கவும். பிறகு வெண்ணெய் துண்டுகளையும் மேலே தூவவும்.
தோசையை மூடி போட்டு, மிதமான தீயில் அப்படியே வேகவிடவும். (திருப்பிப் போட வேண்டாம்). காய்கறிகள் ஏற்கனவே வெந்திருப்பதால். வெண்ணெய் முழுவதும் உருகிவிடாமல் லேசாக சூடாகி, மென்மையாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

Saturday, January 25, 2014

கோதுமை அல்வா

தேவையானவை :
கோதுமை - 1 கப்
பால் - 2 கப்
ஏலக்காய்த்தூள் - 2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
சர்க்கரை - 6 கப்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
நெய் - 2 கப்
செய்முறை :
கோதுமையை முதல்நாளே ஊறவைக்கவும். மறுநாள் கிரைண்டரில் போட்டு அரைத்த தூய்மையான வெள்ளைத்துணி அல்லது வடிகட்டியில் போட்டு  பிழிந்து பால் எடுத்து கொள்ளவும். ஒரு அடிகனமான வாணிலியில் 6 கப் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் வரை நீர் ஊற்றி ஒற்றை கம்பி  பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும். ஆட்டிஎடுத்த கோதுமைப் பாலையும், சாதாரண பாலையும் பாகுடன் சேர்த்துக் கிளறவும். நன்றாக கெட்டியாகக்  கிளறி அகலமான தட்டில் கொட்டி முந்திரி தூவி அலங்கரிக்கவும். சுவையான கோதுமை அல்வா ரெடி.

கலவை பருப்பு உருண்டை

தேவையானவை :
வெள்ளை காராமணி,
கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு,
பச்சரிசி (ரவையாக உடைத்தது) - தலா 1/2 கப்,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - 6,
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை :
பருப்பு வகைகளுடன் மிளகு, காய்ந்த மிளகாய், பச்சரிசி சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் தேங்காய் சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுக்கவும். பெருங்காயத் தூள், உப்பு, வெண்ணெய், சோடா உப்பு, சீரகம் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். சீடை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும். மாவை பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதிக நேரம் வைத்திருக்காமல் உடனே பொன்னிறமாக பொரித்து எடுத்து, வடித்துப் பரிமாறவும்.  இது கரகரப்பாக, ருசியாக இருக்கும்.

தினை பொங்கல்

தேவையானவை :
தினை அரிசி - 1/4 கிலோ
பாசிபருப்பு - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
இஞ்சி - 1 துண்டு
மிளகு , சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கடாயில் தினை அரிசியை போட்டு நிறம் மாறும் வரை வறுக்கவும்.பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.இரண்டையும் சேர்த்து 1:21/2 என்ற் விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவைக்கவும்.பின் நெய்யில், முந்திரி,இஞ்சி,மிளகு, சீரகம்,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து , வேகவைதத தினையில் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக் கலக்கிதேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

Friday, January 10, 2014

எலுமிச்சை சூப்

தேவையானவை:
எலுமிச்சம் பழம் – 3
காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
செய்முறை:
 ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
 இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக  இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்).
 அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும்.
 சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.

கடலைப் பருப்பு மரவள்ளி புட்டு

தேவையானவை :
கடலைப் பருப்பு -  1/2கிலோ,
பொடித்த வெல்லம் – 1  கப்,
நெய்யில் வறுத்த முந்திரி – 10 (தூள் செய்தது),
திராட்சை – 10,
ஏலக்காய் தூள் சிறிது.
துருவிய தேங்காய் – 1 கப்,
நெய் 3 மேசைக் கரண்டி,
மரவள்ளிக் கிழங்கு வேகவைத்து துருவியது – 1 கப்.
செய்முறை :
கடலைப் பருப்பை உதிர் உதிராக வேகவைத்து  வடித்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், பொடித்த கடலைப்பருப்பைப் போட்டு நன்றாக வதக்கவும். அது உதிரி உதிரியாக வந்ததும் தேங்காய், ஏலக்காய் தூள், சுத்தமான பொடித்த வெல்லம், துருவிய மரவள்ளிக் கிழங்கு சேர்த்து வதக்கி புட்டு பதம் வந்ததும் திராட்சை, முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும். அம்மனுக்கு புட்டு ரெடி. இதே போன்று மரவள்ளிக்கிழங்கு சேர்க்காமல்  பாசிப்பருப்பிலும் செய்யலாம். அவல், அரிசி மாவிலும் செய்யலாம்.

கொள்ளு மசியல்

தேவையானவை :
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
சிறிய வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை – 10 இலைகள்
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
 மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

அன்னாசிப்பழ பொரியல்

தேவையானவை :
அன்னாசிப் பழம் (பொடியாக நறுக்கியது) – 1 கப்,
வெங்காயம் – 2,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
இஞ்சி – 1 துண்டு,
கடுகு, உளுந்து,
கறிவேப்பிலை – தாளிக்க,
மிளகாய் – 3,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன். 
செய்முறை :
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து வறுத்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து, நன்கு வதக்கவும்.  இஞ்சியை பொடியாக நறுக்கி அதையும் வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அன்னாசிப்  பழத்தையும் போட்டு நன்கு வதக்கி, உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

Sunday, January 5, 2014

கொண்டைக் கடலை குருமா

தேவையானவை 
தக்காளி - 100 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
கேரட், பீன்ஸ்  150 கிராம்,
உருளைக் கிழங்கு - 1/4 கிலோ,
பூண்டு - 2 ,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 6,
தேங்காய் - ஒரு மூடி,
கொண்டைக் கடலை - 100 கிராம்,
பட்டை, கிராம்பு, சோம்பு - தேவையான அளவு,
கறி மசாலா, மஞ்சள் தூள் - தேவையான அளவு
கறி வேப்பிலை, மல்லித் தழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நன்றாகக் கொதித்த எண்ணெயில் தக்காளி, வெங்காயம், பட்டை, கிராம்பு, அரைத்த இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதித்தபிறகு, மிளகாய், மல்லி, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, கேரட், பீன்ஸ், உருளை, கொண்டைக் கடலை, கீறிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். நன்கு கொதித்த பிறகு, மல்லித்தழைபோட்டு இறக்கினால் சூடான குருமா ரெடி!

Saturday, January 4, 2014

வெஜிடேபிள் கறி

தேவையான பொருட்கள்: 
கடலை மாவு - 1/2 கப் 
புளித்த தயிர் - 2 கப் 
தண்ணீர் - 5-6 கப் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
வெந்தயம் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
வரமிளகாய் - 3-4 
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) 
பச்சை பட்டாணி - 1/4 கப் 
வெண்டைக்காய் - 8 (நறுக்கியது) 
காலிஃப்ளவர் - 1/4 கப் 
உருளைக்கிழங்கு - 1/4 கப் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 2 டீஸ்பூன் 
தாளிப்பதற்கு
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
 செய்முறை: 
முதலில் தயிரை நன்கு அடித்துக் கொண்டு, பின் அதில் கடலை மாவை கொஞ்சமாக போட்டு கலந்து, வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு தாளித்து, பின் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயத்தைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும். அடுத்து கடலை மாவு கலவையை வாணலியில் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 30-40 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெஜிடேபிள் கறி  ரெடி.
 இறுதியில் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கி, பின் மிளகாய் தூளை சேர்த்து செய்து வைத்துள்ள கறியில் ஊற்ற வேண்டும். இந்த கறி ரெசிபியானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
பல்வேறு காய்கறிகளைப் பயன்படுத்துவதால், இது ஒரு ஆரோக்கியமான வெஜிடேபிள் கறி.


கம்பு பிஸ்கட்





தேவையான பொருட்கள் 
கோதுமை மாவு - 70 கிராம்
கம்பு மாவு      - 30 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை பொடி - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - 0.5 கிராம்

செய்முறை
  • கோதுமைமாவுடன் கம்பு மாவு, பேக்கிங் பவுடர் சேர்து சலிக்கவும்.
  • சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து கிரீம் செய்யவும்
  • கிரீமுடன் சலித்த மாவும் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும்.  மாவு உருட்டி பிஸ்கட் அச்சுகளில் வெட்டவும்.
  • அடுமனையில் 140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிம் சூடு செய்யவும்.
  • ஆறவைத்து டப்பாவில்  அடைக்கவும்.
  • பிஸ்கட் உலக அளவில் மிகவும் பிரபலமாக  கிடைக்கும் பலகாரம் ஆகும்.  கோதுமை மாவு சிறிது நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கம்பு மாவு சேர்த்து செய்யப்படுகிறது. 

கம்புதயிர் வடை

தேவையான பொருட்கள்:
கம்பு மாவு – 300 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
தயிர் – 4 கப்
சீரகத் தூள் – 4 டீஸ்பூன்
பெரிய வெங்காயத்துருவல் – 1 கப்
கொத்தமல்லி – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை:
கம்பு மாவுடன் அரிசி மாவைச் சேர்த்து, உப்பு கலந்து மசால் வடை பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் பச்சை மிளகாய், சீரகத்தூளை சேர்த்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். தயிரை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து அதில் கலக்கவும். இதில் அவித்த கம்பு வடைகளை ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். தட்டில்  பரிமாறும் முன், வெங்காயத்துருவல், கொத்தமல்லித் தழையை தூவி விடவும். கோடை காலத்திற்கேற்ற சத்தான டிபன், உடலுக்கு குளிர்ச்சி தரும். அனைத்து வயதினருக்கும் உகந்தது. கம்பங்கூழ் பிடிக்காத குழந்தைகள் கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்

Thursday, January 2, 2014

காளான்சாண்ட்விட்ச்

தேவையானவை :
காளான்  – 50 கிராம்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 2,
இஞ்சி,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
குடைமிளகாய் – 1,
உப்பு – தேவைக்கேற்ப,
கரம் மசாலா – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -  கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் – தேவைக்கேற்ப,
கொத்தமல்லி – 1 கைப்பிடி,
புதினா – அரை கட்டு.
செய்முறை :
முதலில் காளானைக் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயுடன் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் வைத்து சாண்ட்விட்ச் செய்யவும். கொத்தமல்லி சட்டினி (அல்லது) புதினா சட்னி தொட்டுக் கொள்ள ஏற்றது.
 இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமாக உள்ளது.  ரத்த ஓட்டத்துக்கும் கூரிய பார்வைக்கும் வழிவகுக்கும்.

தக்காளி பஜ்ஜி

தேவையானவை :
கடலை மாவு – 150 கிராம்
நாட்டுத் தக்காளி – 6
பெருங்காயம் – கால் டேபிள்ஸ்பூன்
பூண்டு – 5 பல்
குறுமிளகு – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பொரி – 100 கிராம்
எழுமிச்சைப்பழம் – 1
பச்சைமிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 1
கொத்தமல்லி – 1 கொத்து.
செய்முறை :

பூண்டு, குறுமிளகை அரைத்து கடலைமாவில் சேர்த்து, அதில் பெருங்காயத்தையும் உப்பையும் கலந்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்  கொள்ளுங்கள்.
தக்காளியை நன்கு கழுவி இந்த மாவில் போட்டுக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  மாவோடு சேர்த்து தக்காளியை போட்டு வேகவைத்து எடுங்கள்.
 இன்னொரு பாத்திரத்தில் பொரியைக் கொட்டி, வெங்காயம், பச்சை மிளகாயை  சிறுசிறு துண்டுகளாக வெட்டி பொரியில் போட்டு எலுமிச்சைப்பழத்தைப் பிழித்து விட்டு, கொத்தமல்லியை வெட்டிப் போட்டு நன்கு பிசைந்து  கொள்ளுங்கள்.
தக்காளி பஜ்ஜியை இரண்டாக வெட்டி நடுவில் இந்த பொரிக்கலவையை அள்ளி வைத்து பரிமாறுங்கள்.
 வித்தியாசமான ஆந்திரா தக்காளி  பஜ்ஜி ரெடி.

முருங்கைத் தண்டு சூப்


தேவையானவை :
முருங்கைக் கீரையின் தண்டுகள், காம்புகள் – 1 கைப்பிடி,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 6 பல்,
சின்ன வெங்காயம் – 4,
தக்காளி – 1,
மிளகு – அரை  டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
முருங்கைத் தண்டுகளையும் காம்புகளையும் நன்றாக இடிக்கவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து இடித்து மிளகு, சீரகம், மஞ்சள் தூள்,  உப்பு சேர்த்து, தக்காளி நறுக்கிப் போட்டு நிறைய தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும். வெந்ததும் விசிலை எடுத்துவிட்டு நன்கு கடையவும். பிறகு, 1 பங்கு  தண்ணீர் 1/4 பங்காக வற்றும் வரை கொதிக்க வைத்து சாப்பிடவும்.
 வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டால் அதிகமாக சிறுநீர் பிரியும். உடலில் உள்ள கெட்டக் கழிவுகள் சிறுநீராக வெளியேறும். உடல் புத்துணர்ச்சி பெறும்.  ஊளைச் சதை தானாகக் குறையும்.இந்த முருங்கைத் தண்டு சூப் கொழுப்பை கரைக்கும்.

கொள்ளு சூப்


 தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2
 செய்முறை