தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய், உப்பு - தலா அரை கிலோ,
புளி - 200 கிராம்,
கடுகு, எள் - தலா 100 கிராம்,
வெந்தயம், மஞ்சள் பொடி - தலா 50 கிராம்,
நல்லெண்ணெய் - கால் கிலோ,
தண்ணீர் - கால் லிட்டர்.
செய்முறை:
பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி, உப்பை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கடுகு, வெந்தயம், எள் மூன்றையும், வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும். எண்ணெயை கடாயில் விட்டு பச்சை மிளகாய்களை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு புளி, உப்பு ஊற வைத்ததைப் பிசைந்து வடிகட்டி, மஞ்சள் பொடி போட்டு, இதில் ஊற்றவும். புளிக் காய்ச்சல் போன்று எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை கொதிக்க வைத்து, கீழே இறக்கி, இதனுடன் கடுகு, எள், வெந்தயப் பொடியைக் கலக்கவும். ஜாடிகளில் போட்டு ஆறிய பின்பு மூடி வைக்கவும். குறிப்பு: இது 6 மாதம் வரை கெடாது. சாதத்தில் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். உப்புமா, தோசை, இட்லி, தயிர் சாதத்துக்கும் ஏற்றது.

No comments:
Post a Comment