தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வறுத்த பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள், ஆய்ந்தெடுத்து கழுவிய கீரையை போட்டு, கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் தேங்காய் - சீரக விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த பருப்பு - கீரையை சேர்த்து, உப்பு போட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment