Monday, September 30, 2013

டிரைஃப்ரூட்ஸ் அப்பம்

தேவையானவை:
 முந்திரி, பாதாம், பிஸ்தா அரைத்த விழுது - அரை கப், மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பேரீச்சம்பழம் - 4, ஏலக்காய் - 4, பொடித்த வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு. செய்முறை: 
பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு கிண்ணத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை அரைத்த விழுது, மைதா மாவு, கோதுமை மாவு, ஏலக்காய் பொடி, பேரீச்சை துண்டுகள், தேங்காய்துருவல் ஆகிய எல்லாவற்றையும் சேர்க்கவும். வெல்லத்தூளில் சிறிது நீர் விட்டு, கரைத்து வடிகட்டிக் கொதிக்க வைக்கவும். அந்த வெல்லத் தண்ணீரையும் மேற்சொன்ன கலவையில் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அப்பங்களாக வார்த்து எடுக்கவும். மெத்தென்றிருக்கும் ருசியான ஸ்வீட் அப்பம் இது. டிரைஃப்ரூட்ஸ் அப்பம்: அத்திப்பழம், அக்ரூட், உலர் திராட்சை போன்ற டிரைஃப்ரூட்ஸ் வகைகளையும் சேர்த்துச் செய்யலாம். இன்னும் ‘ரிச்’சாக இருக்கும்.

பாகற்காய் க்ரிஸ்பீஸ்

தேவையானவை: 
பாகற்காய் - 4,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு தேவையான அளவு, மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், அரிசிமாவு - கால் கப், கடலைமாவு - கால் கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை:
 பாகற்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து, அத்தண்ணீரில் உப்பு சேர்த்து பாகற்காய்களை புளித்தண்ணீரில் ஊற வைக்கவும். அரை மணி நேரம் ஊறிய பின்னர் அந்த பாகற்காய் வில்லைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, அரிசிமாவு, கடலைமாவு, பெருங்காயத்தூள் இவைகளை சேர்த்து நன்றாக பிசறவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து சிவக்க பொரித்தெடுக்கவும். கசப்பில்லாத பாகற்காய் க்ரிஸ்பீஸ் ரெடி.
 கரேலா க்ரிஸ்பீஸ்: இந்த முறையில் செய்தால் பாகற் காயின் கசப்பே தெரியாது. கடலைமாவுக்கு பதில் பொட்டுக்கடலை மாவு சேர்த்தும் செய்யலாம்

நவரத்தின காய்கனி சாலட்

 தேவையான பொருட்கள்
 கேரட் - 1
வெங்காயம் - 1 த
க்காளி - 1
வெள்ளரிப் பிஞ்சு - 1
எலுமிச்சம் பழம் - 1
பப்பாளி - 8 துண்டுகள்
ஆப்பிள் - 8 துண்டுகள்
வாழைப்பழம் - 8 துண்டுகள்
மாதுளை முத்துக்கள் - 1 டீஸ்பூன்
வெள்ளைச் சென்னா, கடலை, காராமணி (ஊறவைத்து வேக வைத்தது) - 4 டேபிள் ஸ்பூன்
முளைகட்டிய பச்சைப்பயறு - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறுப்பு மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை 
* வெங்காயம், தக்காளி, வெள்ளரிப் பிஞ்சை பொடிப்பொடியாக நறுக்கவும். * கேரட்டை துருவிக் கொள்ளவும். * எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து, அதில் அனைத்துப் பழத்துண்டுகள், நறுக்கிய காய்கள், துருவிய கேரட், வேக வைத்த தானியங்கள், முளைவிட்ட பயறு, உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலாத் தூள் சேர்த்து நன்கு குலுக்கி கலக்கவும். * காய்கனி தானிய சாலட் பரிமாற தயார். குறிப்பு * சாட் மசாலாத் தூள், ரெடியாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். * தானிய வகைகளை ஊறவைத்து பிரஷர் குக்கரில் வேக வைத்து உபயோகிக்கவும். * பயிறைத் தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து, ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு துணி காய்ந்த நேரங்களில் தண்ணீர் தெளித்தால் 20 மணி நேரத்தில் முளைகட்டிவிடும்.

ரங்கோலி சுண்டல்




தேவையானவை: 
பச்சைப் பட்டாணி, முளைகட்டிய சோளம், சோயா - தலா ஒரு கப், கேரட் துருவல் - 4 டீஸ்பூன், மாங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சோளம், பட்டாணி, சோயா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி விழுது, மாங்காய் துருவல், கேரட் துருவல், வேக வைத்த சோளம், பட்டாணி, சோயா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவினால்... ரங்கோலி சுண்டல் ரெடி

ஃப்ரூட் சுண்டல்




தேவையானவை:  
முளைகட்டிய சோளம், கொய்யாபழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளிப்பழத் துண்டுகள் - தலா ஒரு கப், உலர் திராட்சை - 10.
செய்முறை:  
முளைகட்டிய சோளத்துடன் நறுக்கிய கொய்யாப்பழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளி பழத் துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உலர் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: சுலபமாக செய்யக்கூடிய இந்த சுண்டலில் ருசியும், சத்தும் ஏராளம்!

பாசிப்பருப்பு கார சுண்டல்




தேவையானவை:  
 பாசிப்பருப்பு - 200 கிராம், 
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், 
கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, 
காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  
 பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சுரைக்காய் அல்வா

  தேவையானவை:
சுரைக்காய் துருவல் - ஒரு கப்,
 பால் - ஒரு கப்,
சர்க்கரை - அரை கப்,
ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
பொரி கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை: 
முதலில் சுரைக் காயை பால் விட்டு வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை போட்டு, அது கரைந்ததும் நெய் விட்டுக் கிளறவும். கெட்டியாக வரும்போது பொரிகடலை மாவைப் போட்டு, கிளறவும். நன்றாக கெட்டியானதும், ஏலக்காய்தூளைப் போட்டு கலந்து இறக்கவும். தேவையானால் சில சொட்டுகள் பைன் ஆப்பிள் எசன்ஸ் விட்டுக் கொள்ளலாம். சுரைக்காய் அல்வா: தண்ணீர் சத்து நிறைந்த சௌசௌவிலும் இந்த அல்வா செய்யலாம். துருவிய முந்திரி, பாதாம், சிறிது சிவப்பு கலர் எல்லாம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். பொரிகடலை மாவு சேர்க்காமலும் செய்யலாம். ஆனால், இன்னும் கூடுதலான நேரம் பிடிக்கும்.

பயறு இனிப்பு சுண்டல்




தேவையானவை:  பச்சைப் பயறு - 200 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை: பச்சைப் பயறை லேசாக வறுத்து, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து சிறிது கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடிப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த பயறை தண்ணீர் வடித்து சேர்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

ஸ்டஃப்டு பாலக்


  தேவையானவை: 
 பாலக் (பசலை) கீரை - ஒரு கட்டு (நமக்கு தேவையான கிழியாத பெரிய இலைகளாக எடுத்து கொள்ளவும்), அமெரிக்கன் கார்ன் அல்லது மக்காச்சோளம் - 3, தனியாதூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், டொமேடோ ப்யூரி (தக்காளி சாறு) - அரை கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை:
 பாலக் கீரையில் பெரிய இலைகளாக எடுத்து, தண்டை நீக்கிவிட்டு சுத்தம் செய்து, சுடுநீரில் அமிழ்த்தி எடுத்து ஈரமில்லாமல் துடைத்துவைக்கவும். அமெரிக்கன் கார்னை உதிர்த்து வேகவைக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சியைப் போட்டு, பிறகு தனியாதூள், சீரகத்தூள், மிளகாய்தூள், பெருங்காயம், உப்பு, மஞ்சள்தூள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். அத்துடன் வேகவைத்த சோளமும் சேர்த்து வதக்கி, டொமேடோ ப்யூரியையும் கலந்து, பொடியாக நறுக்கிய மல்லித்தழையையும் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி வைக்கவும். இந்தக் கலவை சற்று ஆறியதும், பாலக் இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து, அதனுள் இந்தக் கலவையை வைத்து ரோல் செய்யவும். பிறகு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சுருட்டி வைத்த 7 அல்லது 8 பாலக் பீஸ்களை வைத்து, பொன்னிறமாக மாறும் வரை திருப்பி புரட்டி எடுக்கவும். ஸ்டப்டு பாலக்: கார்ன்-க்கு பதிலாக ஸ்டஃப் செய்ய உருளைக்கிழங்கு போன்ற வேறு ஏதாவதுகூட வைக்கலாம். பாலக் கீரை இல்லையெனில் கோஸ் இதழ்களை உபயோகிக்கலாம்

முருங்கைக்கீரை அடை



தேவையான பொருள்கள்:
துவ‌ர‌ம் ப‌ருப்பு= 1 க‌ப்
பாசிப்ப‌ருப்பு‍ = அரை க‌ப்
க‌ட‌லைப்ப‌ருப்பு=‍ 1 க‌ப்
உளுத்த‌ம்ப‌ருப்பு‍ =அரை க‌ப்
புழுங்க‌ல‌ரிசி‍ = அரை க‌ப்
ப‌ச்ச‌ரிசி= அரை க‌ப்
வ‌ற்ற‌ல் மிள‌காய்‍=8
சோம்பு=1 ஸ்பூன்
பொடியாக‌ அரிய‌ப்ப‌ட்ட‌‌  வெங்காய‌ம்=2
தேங்காய்த்துருவ‌ல்=அரை க‌ப்
க‌டுகு‍=1 ஸ்பூன்
நெய்‍= 1 ஸ்பூன்
எண்ணெய்=1 ஸ்பூன்
க‌றிவேப்பிலை=சிறிது
முருங்கைக்கீரை= 1 க‌ப்
தேவையான‌ உப்பு
செய்முறை:

ப‌ருப்பு வ‌கைகளையும் அரிசி வகைகளையும் தனித்தனியாக, போதுமான‌ நீரில் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் ஊற‌ வைக்க‌வும்.

முத‌லில் அரிசி வ‌கைக‌ளை மிள‌காய், சோம்பு சேர்த்து இலேசான‌ கொர‌கொர‌ப்புட‌ன் அரைக்க‌வும்.

பிற‌கு ப‌ருப்பு வ‌கைக‌ளைச் சேர்த்து கொர‌கொர‌ப்பாக‌ உப்புட‌ன் சேர்த்து அரைக்க‌வும்.

தேங்காய்த்துருவ‌ல், முருங்கைக்கீரை, வெங்காய‌ம் சேர்க்க‌வும்.

நெய், எண்ணெய் இர‌ண்டையும் சேர்த்து சுட‌ வைத்து க‌டுகு, காய‌ம், க‌றிவேப்பிலைக‌ளைத் தாளித்து அடை மாவில் கொட்டி க‌ல‌க்க‌வும்.

தோசைக்க‌ல்லில் மெல்லிய‌ அடைக‌ளாய் வார்த்து, பொன் முறுவ‌லாய் ஆகும் வ‌ரை வேக‌விட்டு எடுக்க‌வும்.

சுவையான‌ முருங்கைக்கீரை அடை சூடாக‌ இப்போது த‌யார்

பனீர் பாயசம்

தேவையானவை:
பால் - 1 லிட்டர்,
பனீர் - 200 கிராம்,
சர்க்கரை - முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
 செய்முறை: 
பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, பாதியளவு ஆகும்வரை கொதிக்கவிடுங்கள். அடிக்கடி கிளற வேண்டாம். மேலே படியும் ஏடுகளை பாத்திரத்திலேயே ஓரிடத்தில் ஒதுக்கிவிட்டு, கொதிக்க விடுங்கள். பின், அடுப்பை அணைத்துவிடுங்கள். பனீரைச் சிறு துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள். குக்கரில் சர்க்கரையைப் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை கொதிக்க விடுங்கள். பின்னர், அதில் பனீர் துண்டுகளைப் போட்டு மூடி, மூன்று விசில் வந்தவுடன் இறக்குங்கள். வெயிட்டை மெதுவாகத் தூக்கி, பிரஷரை வெளியேற்றிவிட்டு, சர்க்கரைப் பாகுடன் கூடிய பனீரை, ஏடு படிந்த பாலில் சேருங்கள். இந்தக் கலவையை ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்குங்கள்.
குறிப்பு: ஒரு அடுப்பில் பால் கொதித்துக் கொண்டிருக்க, இன்னொரு அடுப்பில் குக்கரை வைத்து, பனீர், பாகு கலவை தயாரித்தால், வேலை சுலபமாக முடியும்!

மில்க் கேக்

 தேவையானவை: 
 பால் - ஒரு லிட்டர்,
சர்க்கரை - அரை கப்,
நெய் - அரை கப்,
வினிகர் - 2 டீஸ்பூன்.
செய்முறை: 
முதலில், பாலில் பாதியளவு எடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். பால் கொதிக்கும்போது, அதில் வினிகரைச் சேருங்கள். உடனே பால் திரிந்துவிடும். திரிந்த பாலை (சாதாரண வடிகட்டியில்) வடிகட்டுங்கள். பனீர் ரெடி! மீதியுள்ள பாலை ஒரு கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் காய்ச்சுங்கள். காயும் பாலில் பனீரைச் சேருங்கள். இது பாதியாகச் சுண்டியதும் சர்க்கரையைப் போட்டு, சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து, விடாமல் நன்கு கிளறுங்கள். பால் நன்கு சேர்ந்து கெட்டியாகி, நெய் பிரிந்து வரும்வரை கிளறவேண்டும். பிறகு, ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, மற்றொரு தட்டால் நன்கு மூடி, சற்றுச் சாய்வாக வையுங்கள். அதிகப்படியான நெய் வடிந்துவிடும். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம்வரை ஆறவிடுங்கள். பின்னர் அதை துண்டுகள் போடுங்கள். விருப்பப்பட்டால் சீவி, வறுத்த பாதாமை அதன்மீது தூவி அலங்கரிக்கலாம்.
 குறிப்பு: ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் வைத்தால்தான் பால் சூட்டில் தட்டும் சூடாகி, கேக்கின் அடிப்புறம் சிவந்தும், மேலே பொன்னிறத்திலும், டபுள் கலரில் பார்க்க சூப்பராக இருக்கும்... சாப்பிடவும்தான்!

நேந்திரம்பழ பாயசம்

 தேவையானவை:
 நேந்திரம்பழம் - 3,
அச்சு வெல்லம் - 10,
தேங்காய் - 1,
ஏலக்காய்தூள் - சிறிதளவு.  
செய்முறை:
நேந்திரம்பழங்களை தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பின் அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, பழம் மூழ்கும் அளவு நீர் விட்டு கொதிக்கவையுங்கள். அடிக்கடி கிளறிவிடுங்கள். சிவப்பு நிறம் வரும்வரை கிளற வேண்டும். தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அச்சு வெல்லத்தை நன்றாகப் பொடித்து, நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, பழக்கூழில் சேர்த்து கிளறுங்கள். முதலில் இரண்டாம் பாலை பாயசத்தில் விட்டு கிளறி, சிறிது பக்குவமாக வந்தபின் முதல் பாலையும் அதில் விட்டு நன்கு கிளறுங்கள். பொடித்த ஏலக்காயை அதில் போட்டு இறக்குங்கள். கேரளா ஸ்பெஷலான இந்த பாயசத்தை நீங்களும் செய்து சுவையுங்களேன்! சொக்கிப் போவீர்கள்.

தினை அரிசி பாயசம்

 தேவையானவை: 
 தினை அரிசி - ஒரு கப்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
பால் - 2 டம்ளர்,
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - 10,
குங்குமப்பூ---, நெய், கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு - தலா சிறிதளவு.
 செய்முறை: 
தினை அரிசியை சுத்தம் செய்து, நன்கு வாசம் வர வறுத்து, பாலும், நீரும் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து, அந்த விழுதை பாலுடன் சேர்த்து சர்க்கரை போட்டு, வெந்த தினை அரிசியையும் நன்கு கரண்டியால் மசித்துச் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்தவுடன் குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்த்து, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப் போட்டு இறக்குங்கள். இந்தப் பாயசம், பால் பாயசம் போலவே இருக்கும். ஒருமுறை சுவைத்தவர்கள், பிறகு விடவே மாட்டார்கள்.

வெள்ளரி விதை பாயசம்

 தேவையானவை: 
 வெள்ளரி விதை (கடைகளில் கிடைக்கிறது) - அரை கப்,
பாதாம்பருப்பு - 20,
 பால் - 3 கப்,
சர்க்கரை - ஒரு கப்,
முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - தேவைக்கேற்ப,
ஏலக்காய்தூள் - சிறிதளவு,
நெய் - சிறிதளவு.
செய்முறை:
வெள்ளரி விதையை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பாதாம்பருப்பை தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து எடுத்து, பிறகு இரண்டையும் மிக்ஸியில் பால் விட்டு மை போல அரைத்தெடுங்கள். அதனுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவையுங்கள். நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானவுடன் அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவையுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து அதில் போடுங்கள். ஏலக்காய் பொடித்ததையும் போட்டு இறக்குங்கள். விருப்பப்பட்டால் குங்குமப்பூவை மேலே தூவிக்கொள்ளலாம். கோடையில் இப்பாயசத்தை அடிக்கடி செய்து பருகலாம். குளிர்ச்சி தரக்கூடியது.

Friday, September 27, 2013

தேங்காய் பால் சூப்

தேவையான பொருள்கள்:-
தேங்காய் பால் –  கப் (250-கிராம்)
பசும்பால் –  கப் (250-கிராம்)
பெரிய வெங்காயம் -   நறுக்கியது
பச்சைமிளகாய் –  5  நறுக்கியது
இஞ்சி –  சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி தழை
எலுமிச்சை பழம் –  பாதி பழம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் தேவையான அளவு
சோள மாவு   2 ஸ்பூன்
செய்முறை:-

தேங்காயை துருவி அதை மிக்சியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
அதனுடன் பால்பச்சைமிளகாய்இஞ்சிகொத்தமல்லி தழை,  உப்பு 
ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை 
 சேர்த்து கொத்தித்த கலவையுடன் ஊற்றவும்.
நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு 
தேவையான அளவு உப்புமற்றும் எலுமிச்சை சாறு  ஊற்றி இறக்கவும்.
சுவையான(பசியை தூண்டகூடிய)ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் தயார்.

பப்பாளி இஞ்சி சூப்

தேவையான பொருட்கள்: 
பப்பாளி பழம்- சிறியது (பாதி),  
இஞ்சி - ஒரு சிறிய துண்டு, 
வெங்காயம் - ஒன்று 
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், 
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, 
நறுக்கிய கொத்தமல்லி தழை,  கிரீம் - சிறிதளவு. 
உப்பு - தேவையான அளவு. 
செய்முறை:  
• வெங்காயம், பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• இஞ்சியை தோல் சீவி கொள்ளவும். 

• கடாயில் எண்ணெயை சூடாக்கி வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். 

• ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி சூப் கப்பில் ஊற்றவும். 

• கடைசியாக அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

Wednesday, September 25, 2013

நூடுல்ஸ் பாயசம்

 தேவையானவை:
 அரிசிமாவு - 2 கப்,
பால் - இரண்டரை கப்,
கண்டென்ஸ்டு மில்க் - அரை கப்,
சர்க்கரை - 2 கப்,
முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய், ஏலக்-காய்தூள்,
குங்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை: 
அரிசிமாவை முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள். அந்த மாவை ஓமப்பொடி அச்சில் வைத்து, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்கவைத்து, கொதிக்கும் தண்ணீரில் பிழிந்துவிடுங்கள். அது வெந்தவுடன் மேலே மிதந்து வரும். பிறகு அடுத்த ஈடு பிழியுங்கள். இப்படியே எல்லா மாவையும் பிழிந்த பின் பாலையும், கண்டென்ஸ்டு மில்க்கையும் போட்டு கொதி வந்தவுடன் சர்க்கரையையும் போட்டு இறக்கவும். பிறகு பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூவையும் போட்டுக் கலந்து பரிமாறுங்கள். இப்போதெல்லாம் நூடுல்ஸ் விரும்பாத குழந்தைகளே கிடையாது. குழந்தைகளுக்கு இது ஒரு வித்தியாசமான பாயசமாக இருக்கும்.

பயறு இனிப்பு சுண்டல்




தேவையானவை:  
பச்சைப் பயறு - 200 கிராம்,
 வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
 பச்சைப் பயறை லேசாக வறுத்து, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து சிறிது கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடிப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த பயறை தண்ணீர் வடித்து சேர்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

பீட்ரூட் பாயசம்

  தேவையானவை:
பீட்ரூட் - ஒரு கப்,
சர்க்கரை - ஒரு கப்,
பால் - 4 கப்,
முந்திரிப்பருப்பு - சிறிதளவு,
நெய் - சிறிதளவு,
ஏலக்காய் எஸன்ஸ் - 2 சொட்டு.
 செய்முறை: 
பீட்ரூட்டை நன்கு தோல் சீவி கழுவி, அதை துண்டு துண்டாக நறுக்கி குக்கரில் வேக வையுங்கள். பின் அதை மிக்ஸியில் மைபோல் அரைத்து அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன் முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்துப் போட்டு எஸன்ஸ§ம் விட்டு இறக்கிவிடுங்கள். சிவப்பு நிற பீட்ரூட்டாக இருந்தால்தான் பாயசத்தின் கலரைப் பார்த்தவுடனே அனைவரையும் சுண்டி இழுக்கும். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய, வைட்டமின் சத்து நிறைந்த பாயசம் இது.

முப்பருப்பு பாயசம்

 தேவையானவை:
 கடலைப்பருப்பு - அரை கப்,
 பாசிப்பருப்பு - அரை கப்,
பாதாம்பருப்பு - கால் கப்,
முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு,
குங்குமப்பூ - சிறிதளவு.  
செய்முறை:
 கடலைப்பருப்பு, பாசிப்பருப்பையும் வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பிறகு பாதாம்பருப்பை ஊறவைத்து தோலுரித்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளுங்கள். பிறகு அதை பாலுடன் சேர்த்து நன்கு கொதித்து வெந்தவுடன் பருப்பையும் சேர்த்து சர்க்கரையைப் போட்டு கொதிக்கவிடுங்கள். குங்குமப்பூவை கரைத்து அதில் விடுங்கள். முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப்போட்டு பொடித்த ஏலத்தையும் போட்டு இறக்குங்கள். சுடச்சுட, புரதச்சத்து மிகுந்த பாயசம் ரெடி

பனீர் பாயசம்

 தேவையானவை:
 பனீர் - 200 கிராம், பால் - ஒரு லிட்டர், கண்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், சீவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.
 செய்முறை:
 பனீரை துருவிக்கொள்ளுங்கள். பாலைக் காய்ச்சி, அதனுடன் சர்க்கரை, பனீர் துருவல் சேருங்கள். தீயைக் குறைத்துவைத்து, பாத்திரத்தில் இருக்கும் பால், முக்கால் பாகமாக (உதாரணமாக, 4 கப் அளவு என்றால் அது 3 கப்) ஆகும் வரை நன்கு கொதிக்கவிடுங்கள். அவ்வப்போது கிளறிவிடுங்கள். முக்கால் பாகமாக வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, கைவிடாமல் கிளறுங்கள் (இல்லையெனில், அடிப்பிடித்து, தீய்ந்துவிடும்). மேலும் 5 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, சீவிய பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காய்தூள் போட்டு இறக்குங்கள். சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறுங்கள்.

ராகி முறுக்கு

 தேவையானவை:
 ராகி மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், எள், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.
 செய்முறை: ராகி மாவை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். மாவு சூடாக இருக்கும்போதே இதனு-டன் பச்சரிசி மாவு, கடலை மாவு, எள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை தண்ணீர் விட்டு பிசைந்து (ரொம்ப கடினமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல்), முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம். ராகி மாவை வேக வைக்காமலும் முறுக்கு செய்யலாம்

வேர்க்கடலை சுண்டல்




தேவையானவை:
  பச்சை வேர்க்கடலை - 200 கிராம், 
காய்ந்த மிளகாய் - 2, 
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், 
கடுகு, எண்ணெய் - தலா ஒரு ஸ்பூன், 
பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  
வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து... வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து சேர்த்து, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சத்துமாவு கஞ்சி

தேவையானவை: 
 முளைகட்டிய கேழ்வரகு, முளைகட்டிய பயத்தம்-பருப்பு, முளைகட்டிய கோதுமை, முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை - தலா ஒரு கப், பொட்டுக்கடலை, கோதுமை ரவை தலா -ஒரு கப், புழுங்கல் அரிசி, வேர்க்கடலை, முந்திரி - தலா அரை கப், எள் - கால் கப்.
 செய்முறை:
 எல்லா பொருட்களையும் வெயிலில் காய வைத்து தனித் தனியாக வறுக்கவும். பிறகு ஒன்றாக சேர்த்து அரைத்து தேவையான வெல்லம், பால் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடிக்கவும். இது, குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது இனிப்பு பிடிக்காதவர்கள் வெல்லத்துக்கு பதிலாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

பச்சைப் பட்டாணி சுண்டல்




தேவையானவை: 
  பச்சைப் பட்டாணி - 200 கிராம், துருவிய கேரட் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - ஒரு தலா டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று.
செய்முறை:  
 தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து வைக்கவும். பச்சைப் பட்டாணியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து... குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வேக வைத்த பட்டாணியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்ததையும் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறவும்.

ராகி பூரி

  தேவையானவை:
ராகி மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப்,
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
 செய்முறை:
எல்லா பொருட்களையும் ஒன்று சேர்த்து பூரி மாவுபோல பிசைந்து கனமான பூரிகளாக பொரித்து எடுக்கவும்.

ராகி போண்டா

  தேவையானவை:
நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 மேல் மாவுக்கு:
 ராகி மாவு - ஒரு கப்,
கடலை மாவு - கால் கப்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்.
 செய்முறை:
மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு இவற்றை சிறு உருண்டைகளாக செய்து, கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள மேல் மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

பார்லி  சாபுதானா சுண்டல்




தேவையானவை: 
  பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை - தலா 100 கிராம், பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 
  பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து, ஊற வைத்த பார்லி, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கடலைப்பருப்பு சுண்டல்




தேவையானவை:  கடலைப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு... வேக வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து, உப்பு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

காஷ்மீரி பனீர் மசாலா

தேவையானவை: 
 பனீர் - 200 கிராம்,
 சீரகம் - ஒரு டீஸ்பூன்,
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 
 முந்திரிப் பருப்பு - 10,
 பச்சை மிளகாய் - 4, 
ஏலக்காய் - 2, 
சர்க்கரை - அரை டீஸ்பூன், 
கெட்டியான தயிர் - அரை கப், 
பால் - தேவைக்கேற்ப, 
காஷ்மீரி கரம் மசாலா - 2 டீஸ்பூன், 
வெங்காயம் - 2, கொத்தமல்லி,
 புதினா - தலா ஒரு கப்,
 வெண்ணெய் - 4 டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.
காஷ்மீரி கரம் மசாலாவுக்கு: 
 சீரகம், சோம்பு - தலா அரை கப், காஷ்மீரி மிளகாய் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 8, கிராம்பு - 4, பட்டை - சிறு துண்டு, வெந்தயம் - கால் டீஸ்பூன், ஜாதிக்காய் - சிறு துண்டு, கறுப்பு ஏலக்காய் - 4 (இவற்றை வறுத்து கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்).
செய்முறை: 
 பனீரை சதுர துண்டுகளாக அரியவும். இளம் சூடான தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து, பனீர் துண்டுகளை ஊற வைக்கவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், ஏலக்காய், சர்க்கரை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, கெட்டியான தயிர் சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது).
கடாயில் வெண்ணெய் சேர்த்து, சீரகம் தாளிக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும். அரைத்த கொத்தமல்லிக் கலவை, பனீர் துண்டுகள், உப்பு, 2 டீஸ்பூன் காஷ்மீரி கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தேவையான பால் ஊற்றி தளர்த்தவும். கொதித்ததும் அடுப்பை அணைத்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி, மேலாக கெட்டியான பால் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

காராமணி இனிப்பு சுண்டல்




தேவையானவை: 
 சிவப்பு காராமணி - ஒரு கப்,
 பாகு வெல்லம் (பொடித்தது) - ஒரு கப், 
 வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
 ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: 
 சிவப்பு காராமணியை வறுத்து, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து... எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... காராமணி இனிப்பு சுண்டல் தயார்.

Monday, September 16, 2013

ஓட்ஸ் சாண்ட்விச்

தேவையானவை: 
ஓட்ஸ் - அரை கப், 
புதினா, கொத்தமல்லி - ஒரு கட்டு,
 பச்சைமிளகாய் - 2, 
தக்காளி - 2, 
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2, 
பெரிய வெங்காயம் - 3, 
வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப், 
கேரட் - 1 (பொடியாக துருவவும்), 
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், 
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: 
ஓட்ஸை பத்து நிமிடம் கொதிநீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். கேரட் வெந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும். கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும். டோஸ்டு செய்த ப்ரெட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்

அத்திப்பழ பாயசம்

தேவையானவை: 
பால் - ஒரு லிட்டர், 
சர்க்கரை - ஒரு கப், 
தேன் - கால் கப், 
பொடியாக நறுக்கிய அத்திப்பழம் - அரை கப், 
பொடியாக நறுக்கிய பாதாம்பருப்பு - கால் கப், 
ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், 
ஜாதிக்காய்தூள் - ஒரு சிட்டிகை. 
செய்முறை:
 ஒரு கப் பாலில், பதப்படுத்திய அத்திப்பழமாக இருந்தால், அரை மணி நேரம் ஊறவையுங்கள். அரை கப் கொதிக்கும் தண்ணீரில் பாதாமை 5 நிமிஷம் ஊறவைத்து தோல் நீக்குங்கள். மீதி உள்ள பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். பாதாமையும் அத்திப்பழத்தையும் (அத்திப்பழம் ஊறவைத்த பாலுடன் சேர்த்து) மிக்ஸியில் அரைத்தெடுங்கள். அரைத்த கலவையை, அடுப்பில் உள்ள பாலுடன் சேர்த்துக் காய்ச்சுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் காய்ந்ததும் இறக்கி, சிறிது ஆறியதும், தேன், ஏலக்காய்தூள், ஜாதிக்காய்தூள் சேர்த்துக் கலந்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். குறிப்பு: ஃப்ரெஷ் அத்திப்பழமாக இருந்தால், பாலுடன் சேர்த்து அப்படியே அரைக்கலாம்.

திடீர் பாயசம்

தேவையானவை: 
கெட்டியான பசும்பால் - ஒரு கப், 
சர்க்கரை - 2 டீஸ்பூன், 
மாஸ்’ பாதாம் பவுடர் - 2 டீஸ்பூன், 
கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன், 
முந்திரி, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு, 
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை. 
செய்முறை: 
பாலில் சர்க்கரையை போட்டு, அது கரைந்ததும் அதோடு பாதாம் பவுடர், கண்டென்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் இறக்கிவைத்து முந்திரி, கிஸ்மிஸ், நெய்யில் வறுத்துப் போடுங்கள். குங்குமப்பூவை மேலே தூவுங்கள். திடீரென விருந்தினர் வந்துவிட்டால் பதட்டப்படாமல் செய்து அசத்தக்கூடிய ‘அவசர பாயசம்’ இது

ஆப்பிள் பாயசம்

தேவையானவை:
பால் - 4 கப், 
சர்க்கரை - ஒரு கப், 
இனிப்பு இல்லாத கோவா - கால் கப் (இனிப்பு உள்ள பால்கோவா என்றாலும் பரவாயில்லை), 
ஆப்பிள் - ஒன்றரை பழம், 
பச்சை நிற ஃபுட் கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, 
நெய் - 2 டேபிள்ஸ்பூன், 
கண்டென்ஸ்டு மில்க் (விருப்பப்பட்டால்) - கால் கப், 
வெனிலா எஸன்ஸ் - ஒரு சொட்டு. 
செய்முறை: 
ஆப்பிளை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். நெய் சேர்த்து ஆப்பிள் துண்டுகளை லேசாக வதக்குங்கள். கோவாவை உதிர்த்துக்கொள்ளுங்-கள். பாலை நன்கு காய்ச்சி, அதனுடன் உதிர்த்த கோவா, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்-கள். ஃபுட் கலரையும், வதக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து, முக்கால் பாகமாக ஆகும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கலக்கிப் பரிமாறுங்கள். வெகு சுவையாக இருக்கும் இந்தப் பாயசம். 

மசாலா ஆம்லெட்

தேவையான பொருட்கள் 
முட்டை - 4 
வெங்காயம் - 100 கிராம்
 தக்காளி - 100 கிராம் 
பச்சை மிளகாய் - 4 
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் 
எண்ணை - 1/4 குழிக்கரண்டி 
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
* வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
* முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு நுரை வரும்படி அடித்துக் கொள்ளவும். 
* இத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து கலக்கவும். 
* தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தோசைக்கல்லில் ஊற்றி சிறிதளவு எண்ணை விடவும். 
* ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மடித்து எடுக்கவும்.

பச்சைப் பட்டாணி பாயசம்

 தேவையானவை: 
பால் - 4, 
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - ஒரு கப், 
நெய் - 4 டேபிள்ஸ்பூன், 
சர்க்கரை - ஒரு கப், 
பால்கோவா - கால் கப், 
பச்சை நிற ஃபுட் கலர் - சிறிதளவு, 
பாதாம்பருப்பு (மெல்லியதாக சீவி நெய்யில் வறுத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், 
ஏலக்காய்தூள் - சிறிதளவு. 
செய்முறை: 
பாலில் சர்க்கரை சேர்த்து, அது முக்கால் பாகமாக (அதாவது 3 கப் அளவுக்கு) ஆகும் வரை காய்ச்சுங்கள். கோவாவை உதிர்த்து, அதில் சேருங்கள். மற்றொரு பாத்திரத்தில் பட்டாணியை (உப்பு சேர்க்காமல்) வேகவையுங்கள். வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு, பட்டாணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதை நெய் சேர்த்து, அடுப்பில் வைத்து, சிறுதீயில் நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் இதை பாலுடன் சேருங்கள். அத்துடன் பாதாம், ஏலக்காய்தூள், பச்சை கலர் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிட்டு, குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

சப்போட்டா பாயசம்

 தேவையானவை: 
சப்போட்டா பழம் - 2,
 பால் - 4 கப், 
சர்க்கரை - அரை கப், 
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப், 
முந்திரிப்பருப்பு, 
நெய் - சிறிதளவு, 
ஏலக்காய் தூள் - சிறிது, 
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை. 
செய்முறை: 
பாலில் சர்க்கரையைப் போட்டு நன்கு கொதிக்கவைத்து, பிறகு அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்குங்கள். பிறகு பழத்தை நன்கு கழுவி தோல், விதை நீக்கி மிக்ஸியில் நன்கு அடித்து, இறக்கி வைத்திருக்கும் பாலுடன் இதை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பழத்தை போடும்முன் முந்திரி வறுத்துப்போட்டு, குங்குமப்பூவும் போடுங்கள். இதைக் குளிரவைத்துப் பரிமாறினால் சுவை அபாரமாக இருக்கும். குறிப்பு: எல்லா சப்போட்டாவையும் அரைப்பதற்குப் பதில், பாதியை பொடியாக நறுக்கியும் போடலாம்.

பிரெட் கார்ன் சாட்

 தேவையான பொருட்கள்: 
வேக வைத்து உதிர்த்த மக்காச் சோளம் - ஒரு கப், பிரெட் துண்டுகள் - 6, 
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், 
சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், கெட்டித்தயிர் - அரை கப், 
சாட் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், 
ஓமப்பொடி - அரை கப், 
நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. 
செய்முறை: 
பிரெட் துண்டுகளை ஓரம் நீக்கி, சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டி, சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தயிரில் சீரகத்தூள், மிளகுத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து, தனியே கலக்கி வைக்கவும். இப்போது, வேகவைத்த மக்காச்சோளத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அத்துடன் பொரித்த பிரெட் துண்டுகள், உப்பு, சாட் மசாலாதூள் மற்றும் தயிர் கலவையையும் ஊற்றி, நன்கு கலந்து விடவும். இதன் மேலே ஓமப்பொடி, நறுக்கிய கொத்தமல்லியை தூவி விட்டுக் கொடுத்தால் சுவையோ சுவைதான். பிரெட் கார்ன் சாட்: இதனுடன் வறுத்த நிலக்கடலை, துண்டாக நறுக்கிய தக்காளி.. இவற்றை சேர்த்துக் கொடுத்தால் இன்னும் கலர்ஃபுல்லாகவும் சிறிது புளிப்புச் சுவையுடனும் அருமையாக இருக்கும்.

வெஜிடபிள் கச்சோரி

தேவையான பொருட்கள்:
 கடலைப்பருப்பு - ஒரு கப், 
உளுத்தம்பருப்பு - கால் கப், 
துவரம்பருப்பு - அரை கப், 
அரிசி மாவு - ஒன்றரை கப், 
மல்லித்தழை-புதினா-இஞ்சி (பொடியாக அரிந்தது) - கால் கப், 
பச்சை மிளகாய் - 5, 
கேரட் துருவல் - கால் கப், 
கோஸ் துருவியது - கால் கப், 
பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப, 
தேங்காய்த் துருவல் - கால் கப், 
எண்ணெய் - ஒன்றரை கப். 
செய்முறை: 
மூன்று பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், ஊறவைத்த பருப்பு, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். பின்னர், அரைத்த விழுதுடன் மல்லித்தழை, புதினா, துருவிய கேரட், கோஸ், வெங்காயம், அரிசிமாவு எல்லாவற்றையும் கலந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, ஒரு ஏந்தலான கரண்டியால் மாவை எடுத்து, எண்ணெயில் விட்டு, ஒவ்வொரு கச்சோரியாக பொரித்தெடுக்கவும். வெஜிடபிள் கச்சோரி: இதில், அரிசிமாவுக்கு பதிலாக ரவை சேர்த்துச் செய்தால், சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். பண்டிகைகளில் வழக்கமாக செய்கிற வடைக்கு பதில் இதைச் செய்யலாம். 

Saturday, September 7, 2013

தினைப் பாயசம்

தேவையானவை:
பாசிப்பருப்பு- 50 கிராம், 
தினை- 100 கிராம், 
நெய்- 2 தேக்கரண்டி 
முந்திரி, திராட்சை- 25 கிராம், 
வெல்லம்- 150 கிராம், 
பால்-200 மில்லி,
 தேங்காய் துருவல்-கால் மூடி.
செய்முறை: 
பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். தினையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, 1 பங்குக்கு 5 பங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, வேக வைத்த கஞ்சியில் ஊற்றவேண்டும். இறுதியாக, பால், தேங்காய் துருவல் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை இட்டுக் கிளறி லேசாகக் கொதிக்கவிட்டால், பாயசம் தயார்.

கலாகண்ட்

 தேவையானவை: 
கன்டென்ஸ்டு மில்க் (கடைகளில் கிடைக்கும்) - 1 கப், 
பனீர் - கால் கிலோ, 
பால் - அரை கப், 
கார்ன்ஃபிளார் - 1 டேபிள் ஸ்பூன், 
பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், 
சீவிய பிஸ்தா - 2 டீஸ்பூன், 
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: 
பனீரை நன்கு துருவிக் கொள்ளுங்கள். துருவிய பனீருடன் பால், கன்டென்ஸ்டு மில்க், பால் பவுடர், கார்ன்ஃபிளார் சேர்த்து, அடுப்பில் வைத்து கிளறுங்கள். நன்கு திரண்டு வரும்வரையில் கிளறி, தட்டில் கொட்டி, சமப்படுத்துங்கள். அதன்மீது சீவிய பிஸ்தா, ஏலக்காய்த்தூள் தூவி, வில்லைகளாக வெட்டிப் பரிமாறுங்கள்.

மில்க் கேக்

 தேவையானவை: 
பால் - ஒரு லிட்டர், 
சர்க்கரை - அரை கப்,
 நெய் - அரை கப், 
வினிகர் - 2 டீஸ்பூன். 
செய்முறை: 
முதலில், பாலில் பாதியளவு எடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். பால் கொதிக்கும்போது, அதில் வினிகரைச் சேருங்கள். உடனே பால் திரிந்துவிடும். திரிந்த பாலை (சாதாரண வடிகட்டியில்) வடிகட்டுங்கள். பனீர் ரெடி! மீதியுள்ள பாலை ஒரு கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் காய்ச்சுங்கள். காயும் பாலில் பனீரைச் சேருங்கள். இது பாதியாகச் சுண்டியதும் சர்க்கரையைப் போட்டு, சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து, விடாமல் நன்கு கிளறுங்கள். பால் நன்கு சேர்ந்து கெட்டியாகி, நெய் பிரிந்து வரும்வரை கிளறவேண்டும். பிறகு, ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, மற்றொரு தட்டால் நன்கு மூடி, சற்றுச் சாய்வாக வையுங்கள். அதிகப்படியான நெய் வடிந்துவிடும். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம்வரை ஆறவிடுங்கள். பின்னர் அதை துண்டுகள் போடுங்கள். விருப்பப்பட்டால் சீவி, வறுத்த பாதாமை அதன்மீது தூவி அலங்கரிக்கலாம். குறிப்பு: ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் வைத்தால்தான் பால் சூட்டில் தட்டும் சூடாகி, கேக்கின் அடிப்புறம் சிவந்தும், மேலே பொன்னிறத்திலும், டபுள் கலரில் பார்க்க சூப்பராக இருக்கும்... சாப்பிடவும்தான்

பனீர் பாயசம்

தேவையானவை:
பால் - 1 லிட்டர், 
பனீர் - 200 கிராம், 
சர்க்கரை - முக்கால் கப், 
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: 
பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, பாதியளவு ஆகும்வரை கொதிக்கவிடுங்கள். அடிக்கடி கிளற வேண்டாம். மேலே படியும் ஏடுகளை பாத்திரத்திலேயே ஓரிடத்தில் ஒதுக்கிவிட்டு, கொதிக்க விடுங்கள். பின், அடுப்பை அணைத்துவிடுங்கள். பனீரைச் சிறு துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள். குக்கரில் சர்க்கரையைப் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை கொதிக்க விடுங்கள். பின்னர், அதில் பனீர் துண்டுகளைப் போட்டு மூடி, மூன்று விசில் வந்தவுடன் இறக்குங்கள். வெயிட்டை மெதுவாகத் தூக்கி, பிரஷரை வெளியேற்றிவிட்டு, சர்க்கரைப் பாகுடன் கூடிய பனீரை, ஏடு படிந்த பாலில் சேருங்கள். இந்தக் கலவையை ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்குங்கள். குறிப்பு: ஒரு அடுப்பில் பால் கொதித்துக் கொண்டிருக்க, இன்னொரு அடுப்பில் குக்கரை வைத்து, பனீர், பாகு கலவை தயாரித்தால், வேலை சுலபமாக முடியும்! 

Friday, September 6, 2013

கார்ன் - சீஸ் கச்சோரி




தேவையானவை: மைதா - ஒரு கப், ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப், சீஸ் - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - அரை மூடி, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதாவுடன் உப்பு, சிறிதளவு எண்ணெய், தேவையான நீர் விட்டு நன்றாக அடித்துப் பிசைந்து, ஊறவிடவும். ஸ்வீட் கார்ன் முத்துக்களை கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், அரைத்த  கார்ன் சேர்த்து வதக்கவும். உப்பு, எலுமிச்சை சாறு கலந்து இறக்கி ஆறவிடவும். சீஸை துருவி இதனுடன் சேர்க்கவும்.
மைதாவை சிறு பூரிகளாக திரட்டி, சோள கலவையை வைத்து மூடி, அதிக அழுத்தம் தராமல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  ஸ்வீட் கார்னுக்கு பதில், ஊற வைத்து, வேக வைத்த கொண்டைக்கடலையை வைத்தும் தயாரிக்கலாம்.

ராகி வற்றல்

  தேவையானவை:
ராகி மாவு - 2 கப்,
கல் உப்பு - தேவை யான அளவு,
பச்சைமிளகாய் விழுது - சிறிதளவு,
சீரகம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: 
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, உப்பு, பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்க்கவும். இந்த தண்ணீரை ராகி மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்துக்கு கிளறி, ஓமப்பொடி அச்சில் போட்டு சிறு முறுக்குகளாக பிழியவும். வெயிலில் நன்கு உலர்த்தி, டப்பாவில் பத்திரப்படுத்தவும். தேவையானபோது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

ராகி சேவை

தேவையானவை:
உதிர்த்த ராகி இடியாப்பம் - 2 கப்,
நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - அரை கரண்டி,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: 
கடுகு,
உளுத்தம்பருப்பு,
பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: 
 கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, உதிர்த்த இடியாப்பத்தை போட்டுக் கிளறவும். கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

ராகி இடியாப்பம்

 தேவையானவை: 
ராகி மாவு - 2 கப்,
 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு.
 செய்முறை: 
ராகி மாவை இட்லி தட்டில் துணி போட்டு வேக வைக்கவும். மாவில் தண்ணீர் தெளிக்க வேண்டாம். வெந்த மாவை ஆற வைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெந்த ராகி மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்தில் கிளறவும். சூடாக இருக்கும்போதே இடியாப்பங்களாக பிழியவும். ஒன்றின் மேல் ஒன்று பிழியாமல் பரவலாக பிழிந்தால் கொழகொழப்பு இருக்காது. வெல்லம் சேர்ந்த தேங்காய்ப் பாலுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ராகி மாவுடன் அரிசி இடியாப்ப மாவை சம அளவு கலந்தும் செய்யலாம்.

ராகி புட்டு

 தேவையானவை: 
வறுத்த ராகி மாவு - ஒரு கப்,
 அச்சு வெல்லம் - அரை கப்,
துருவிய தேங்காய் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
 செய்முறை: 
உப்பு கலந்த தண்ணீரை மாவில் சிறிது சிறிதாக தெளித்து புட்டுக்கு பிசைந்து கொள்ளவும். பதினைந்து நிமிடம் கழித்து மிக்ஸியில் போட்டு சுற்றவும் (அப்போதுதான் கட்டி இருக்காது). இந்த மாவை இட்லி தட்டில் துணி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும். வெந்த மாவில் துருவிய வெல்லம் அல்லது வெல்லப்பாகு (தேன் பதத்தில்), துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும். வெல்லத்தைப் பாகாக செய்து சேர்த்தால் புட்டு தொண்டையை அடைக்காது.

ராகி முருங்கை அடை

 தேவையானவை:
 ராகி மாவு - 2 கப்,
முருங்கை கீரை - அரை கப்,
 பச்சரிசி மாவு - கால் கப்,
 நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்,
உப்பு - தேவையான அளவு.
 தாளிக்க -
 கடுகு,
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.
 செய்முறை: 
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, வெங்காயம், முருங்கை இலை சேர்த்து வதக்கவும். பத்து நிமிடம் வதங்கியதும், ராகி மாவு, அரிசி மாவில் கொட்டி இளஞ்சூடான தண்ணீரை ஊற்றிப் பிசைந்து, தோசைக் கல்லில் கனமான அடைகளாக தட்டவும்.

சோயா சங்ஸ் பிரெட் புலாவ்

தேவையானவை: சோயா சங்ஸ் - 50 கிராம், பிரெட் துண்டுகள் - 8, பெரிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - 100 கிராம், கேரட் - ஒன்று, தக்காளி - 2, பொடியாக நறுக்கிய புதினா -  சிறிதளவு, தேங்காய் - அரை மூடி, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா 6, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும் கேரட்டை துருவவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சோயா சங்ஸை கொதி நீரில் போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, ஒட்டப்பிழிந்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி உதிர்த்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, சோயா சங்ஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு வதக்கவும். (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட் துருவல், புதினா, கொத்தமல்லி உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கரம் மசாலாத்தூள், உதிர்த்த பிரெட் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின் நெய்யில், வறுத்த முந்திரி திராட்சை, தேங்காய் துருவல், நெய்  சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சுடச் சுட சாப்பிட்டால் சுவை இரட்டிப்பாகும். சிறுவர், பெரியவர் என அனைவரும் விரும்பி சாப்பிடும் புலாவ் இது!

ராகி வெஜ் அடை

 தேவையானவை:
  ராகி மாவு - ஒரு கப்,
 மாவாக்கிய கோதுமை ரவை (அ) கோதுமை மாவு - ஒரு கப்,
 பச்சரிசி மாவு (விருப்பப்பட்டால்) - கால் கப்,
 காய்கறி கலவை - ஒரு கப் (துருவிய கேரட், வெங்காயம், கோஸ், முள்ளங்கி), சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
 நறுக்கிய இஞ்சி,
 கறிவேப்பிலை - சிறிதளவு.
 செய்முறை:
எல்லா பொருட் களையும் ஒன்று சேர்த்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வாழை இலை (அ) பாலித்தீன் ஷீட்டில் எண்ணெய் தடவி கனமான அடைகளாகத் தட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும்.

ராகி பிஸ்கெட்

  தேவையானவை:
ராகி மாவு - ஒன்றரை கப்,
 சர்க்கரைத்தூள் - முக்கால் கப்,
 டால்டா (அ) நெய் - அரை கப்,
 முந்திரி - 10,
 பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை.
 செய்முறை: 
 ராகி மாவையும் பேக்கிங் பவுடரையும் மூன்று முறை சலிக்கவும். இதனுடன் டால்டா (அ) நெய், சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசையவும். நறுக்கிய முந்திரியை போட்டு பிஸ்கெட்டுகளாக தட்டவும். கடாயில் மணலை பரப்பி, பத்து நிமிடங்கள் சூடு செய்து, பிறகு ஒரு அலுமினிய தட்டில் பிஸ்கெட்டுகளை வைத்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து மூடி 'பேக்' செய்யவும். 'மைக்ரோவேவ் அவன்'-ல் செய்பவர்கள் 1600 சென்டிகிரேட்டில் 20 நிமிடங்கள் 'பேக்' செய்யவும்.