Wednesday, February 26, 2014

முடக்கத்தான் இலை சூப்

தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் இலை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன் 
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ப.மிளகாய் - 2
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.முடக்கத்தான் இலை நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.  கடைசியாக இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்த்து இறக்கவும்..  48 நாட்கள் தொடர்ந்து இந்த சூப்பை குடித்து வந்தால், சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும்.

மிளகு - கோதுமை தோசை

தேவையான பொருட்கள்: 
கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

 வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை ஒன்றும் பாதியாக உடைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இப்போது  மிளகு - கோதுமை தோசை தயார் .

Sunday, February 2, 2014

எள்ளு லட்டு

தேவையான பொருட்கள்: 
வெள்ளை எள்ளு - 1 கப் 
வெல்லம் - 1 கப் 
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
 ஏலக்காய் - 2 (பொடி செய்தது) 
தண்ணீர் - 1/2 கப் 
செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளை போட்டு தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு, வெல்லப் பாகுவை ரெடி செய்ய வேண்டும். பாகு நன்கு கெட்டியாகும் போது, அதில் வறுத்து வைத்துள்ள எள்ளு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, நெய்யை சேர்த்து கிளறி, இறக்கி வைக்க வேண்டும். இறுதியில் கலவையானது ஓரளவு சூடாக இருக்கும் போதே, அதனை லட்டுகளாக பிடிக்க வேண்டும். 
குறிப்பாக லட்டு பிடிக்கும் போது, கையில் லேசாக தண்ணீரால் நனைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், லட்டானது 10-15 நாட்கள் நன்றாக இருக்கும்.

தினை தக்காளி தோசை

 தேவையான பொருட்கள்:
 தோசை மாவு - 1 கப் 
சோளம் - 1 கப் 
தினை - 1 கப் 
தக்காளி - 2 (நறுக்கியது)
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
செய்முறை: 
முதலில் சோளம் மற்றும் தினையை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு அரைத்துக் கொண்டு, தோசை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து, 8 மணிநேரம் ஊற வைத்து புளிக்க விட வேண்டும்.  பின்பு அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான தினை தக்காளி தோசை ரெடி.

Saturday, February 1, 2014

பொட்டுக்கடலை வடை

தேவையான பொருட்கள்: 
 பொட்டுக்கடலை - 1/2 கப் 
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
முந்திரி - சிறிது
 வெங்காயம் - 1 (நறுக்கியது)
 பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
 கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை: 
முதலில் மிக்ஸியில் பொட்டுக்கடலை, முந்திரி, கசகசா, சோம்பு போட்டு, நன்கு நைஸாக அரைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடேறியதும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவுக் கலவையை எலுமிச்சை பழ அளவில் எடுத்து, லேசாக தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பொட்டுக்கடலை வடை ரெடி.இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

பாசிபயறு அல்வா

தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு-1 கப்
நெய்-1/2 கப்
சர்க்கரை-1 கப் வேண்டும்
பால்- 1/2 கப்
முந்திரி -/ அழகுபடுத்த ( நெய்யில் வறுத்தது )
ஏலக்காய் தூள்- 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ
செய்முறை:
பாசிபயறு இரவு முழுவதும் ஊற வைக்கவும் .
பிறகு தண்ணிரை வடித்து நன்றாக அரைத்துகொள்ளவும் .
ஒரு அடி கனமான கடாயில் நெய் விட்டு முந்திரி திராச்சையை வருத்துகொள்ளவும்.
பிறகு மேலும் நெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும் நன்றாக வதக்கவும்
கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கட்டி படாமல் கிளறவும் .
பிறகு பால் ,சர்க்கரை சேர்த்து கை விடாமல் வேகவைக்கவும் .
 நெய் வெளியில் கசிந்து வரும் வரை வேக வைக்கவும் .
நெய் வெளியே வந்தவுடன் முந்திரி திராச்சையை சேர்த்து பரிமாறவும்.
    சுவையான வித்தியாசமான அல்வா ரெடி 
  குறிப்பு : (பாசிபயறு வறுத்து ஊற வைத்தால் சுவையும் மணமும் கூடும்)