Monday, March 10, 2014

பாசிப்பருப்பு முறுக்கு


தேவையானவை: 
 பாசிப்பருப்பு மாவு - 2 கப்,
பச்சரிசி மாவு - அரை கப்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
ஓமம் - சிறிதளவு,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: 
வறுத்த பாசிப்பருப்பு மாவு, பச்சரிசி மாவு, உப்பு, ஓமம், மிளகாய்த்தூள், வெண்ணெய் சேர்த்து பிசறி, தேவையான தண்ணீர் சேர்த்து முறுக்குமாவு பதத்துக்கு பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக சுட்டு எடுக்கவும்.

பட்டாணி

தேவையான பொருட்கள்: 
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
மல்லி - 1/2 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பட்டாணி - 500 கிராம் 
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு - 3-4 பற்கள் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
மிளகு தூள் - தேவையான அளவு 
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்) 
கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க) 
செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு சேர்த்து 1-2 நிமிடம் தாளித்து, பின் அதில் மல்லி, ஏலக்காய் பொடி, மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் பட்டாணி, இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் மிளகு சேர்த்து, தீயை அதிகரித்து, 5 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும். பட்டாணியானது நன்கு வெந்துவிட்டால், இறுதியில் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், பட்டாணி ரெசிபி ரெடி.

 

பரங்கிக்காய் -பச்சைப்பயறு கூட்டு


தேவையானவை: 
 பரங்கிக்காய் - 250 கிராம்,
பச்சைப்பயறு - ஒரு கப்,
தேங்காய் - கால் மூடி,
சீரகம் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: 
 பச்சைப்பயறை நன்றாக ஊற விடவும். முளைப்பயிறாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம். தேங்காயுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பயறுடன் பரங்கிக்காயை சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
ஊட்டச்சத்து உணவான பயறு எளிதில் ஜீரணமாகிவிடும்.

கொண்டைக்கடலை பிரியாணி

தேவையான பொருட்கள்: 
சாதத்திற்கு:
 பாசுமதி அரிசி - 2 கப் (வேக வைத்தது) 
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
குங்குமப்பூ - 1 சிட்டிகை 
குறைந்த கொழுப்புள்ள பால் - 1/2 கப் 
எண்ணெய் - 1 டீஸ்பூன்
 மசாலாவிற்கு:
கொண்டைக்கடலை - 1 கப் (இரவு முழுவதும் நீரில் ஊற வைத்தது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
குறைந்த கொழுப்புள்ள தயிர் - 1 கப் 
தக்காளி - 3 (நறுக்கியது) 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 2 கப்
 செய்முறை: 
மசாலாவின் செய்முறை:
 முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொண்டைக்கடலையை கழுவிப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 4-5 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும். 
அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும். 
பின்பு உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், தயிர் சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 பிரியாணி செய்முறை:
குங்குமப்பூவை பாலில் போட்டு தனியாக ஊற வைக்க வேண்டும். பின் கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சாதத்துடன் சேர்த்து, எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேவில் பாதியை போட்டு ஒரு லேயர் தயாரித்து, அதன் மேல் பாதி மசாலாவை தூவ வேண்டும். அடுத்து அதன் மேல் மீதமுள்ள சாத்தை பரப்பி, குங்குமப்பூ பாலை ஊற்றி, இறுதியில் மீதமுள்ள மசாலாவை தூவி, அதன் மேல் அலுமினியம் கவர் சுற்றி, மைக்ரோ வேவ் ஓவனில் 200 டிகிரியில் 20 நிமிடம் வைத்து இறக்கினால், சுவையான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி.

பாசிப்பருப்பு பராத்தா


தேவையானவை:  
பாசிப்பருப்பு - 1கப்,
கோதுமை மாவு - 2 கப்,
மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் தலா - ஒரு டீஸ்பூன்,
பொடியாகநறுக்கிய பச்சைமிளகாய்,கொத்தமல்லி,இஞ்சி துருவல் - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: 
கோதுமை மாவில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தலா அரை டீஸ்பூன் சேர்த்து, உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி போட்டு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். இதில் பாசிப்பருப்பை போட்டு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றியதும் பருப்பை மசித்து சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இட்டு, அதனுள் பருப்பு உருண்டையை வைத்து மூடி, மீண்டும் பராத்தாவாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
100 கிராம் பச்சைப்பயறில் கார்போஹைட்ரேட் 56.7% , புரதம் 24%, கொழுப்பு 1.3%
எனர்ஜி 334 கிலோ கலோரி இருக்கிறது.

Wednesday, March 5, 2014

உருளைக்கிழங்கு வெங்காய தோசை

தேவையான பொருட்கள்: 
தோசை மாவு - 3 கப்
 உருளைக்கிழங்கு - 200 கிராம் (வேக வைத்து மசித்தது) 
வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது) 
கடுகு - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதனை சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், அதில் எண்ணெய் தடவி, மாவை தோசை போன்று ஊற்றி, பின் அதன் மேல் வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை பரப்பி, எண்ணெய் ஊற்றி, 3 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து, பின் அதனை மடித்து பரிமாற வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு வெங்காய தோசை ரெடி. இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

காலிஃப்ளவர் குழம்பு

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது) 
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 1 கப் 
சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
செய்முறை: 
முதலில் காலிஃப்ளவரை உப்பு நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டிவிட்டு, தனியாக காலிஃப்ளவரை வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரைப் போட்டு மிதமான தீயில் 5-6 நிமிடம் வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் மீதமுள்ள 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் பேஸ்ட், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் அரைத்த தக்காளியை ஊற்றி, 2-3 நிமிடம் கிளறி விட்டு, காலிஃப்ளவர், உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி கிளறி, 5-6 நிமிடம் குறைவான தீயில் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியில் மூடியைத் திறந்து, அதில் கரம் மசாலா சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால்,  காலிஃப்ளவர் குழம்பு ரெடி.

பச்சைப்பயறு சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6 முதல் 8, முளைகட்டிய பயறு - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்-தக்காளி - கால் கப், வெண்ணெய் - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: 

பிரெட்டில் வெண்ணெய் தடவவும். பயறுடன் தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை இரண்டு பிரெட் துண்டுகளின் நடுவில் வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும். தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கலாம்.

பருப்பு வகை உணவுகளை நன்றாக வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது.

பச்சைப்பயறு குருமா

தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கபதக்காளி, வெங்காயம் - தலா 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறை 6 மணி நேரம் ஊற வைக்கவும். முளை கட்டிய பயறு எனில் ஊற வைக்க வேண்டாம். தக்காளி, வெங்காயம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் தனியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தக்காளி-வெங்காய மசாலா விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். சிறிது வதங்கியதும் பயறைச் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும் அரைத்த தேங்காய், உப்பு சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கொதித்து வரும்போது கொத்தமல்லி தூவி, இறக்கி பரிமாறவும்.
 மிக அதிக புரதச்சத்து நிறைந்தவை பயறு வகைகள். கலோரி, கார்போஹைட்ரேட், புரதம் மூன்றும் சரிவிகிதத்தில் இருக்கும். சமச்சீரான புரதம் கிடைத்துவிடும்.

பாசிப்பருப்பு துவையல்

தேவையானவை: 
பாசிப்பருப்பு - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
புளி - கொட்டைப்பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்.
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
 செய்முறை: 
பாசிப்பருப்பு ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பருப்புத் துவையலில் சேர்த்துப் பரிமாறவும்.

பாசிப்பருப்பு தோசை


தேவையானவை:
பாசிப்பருப்பு - ஒரு கப்,
பச்சரிசி - கால் கப்,
பச்சை மிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பு, பச்சரிசியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற விடவும். ஊறிய அரிசியை முதலில் லேசாக அரைத்து, பிறகு பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை போட்டு, காய்ந்ததும் மாவை ஊற்றி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

Tuesday, March 4, 2014

கீரை மசியல்

தேவையானப் பொருள்கள்:
கீரை- 1கட்டு
சின்ன வெங்காயம்-3
தக்காளி-1/2
பச்சை மிளகாய்-1
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
உளுந்து
மிளகு-5
சீரகம்-1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-2
பூண்டு-5 பற்கள்
பெருங்காயம்-சிறிது
நல்லெண்ணெய்-2 டீஸ்பூன்
செய்முறை:
கீரையைக் கழுவி நீரை வடிய வைத்து நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு கீரை சேர்த்து வதக்கவும.மூட வேண்டாம். சிறிது நேரத்திலேயே வதங்கிவிடும்.இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
மீண்டும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மிக்ஸியில் உள்ள கீரையில் கொட்டி சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.தேவையான உப்பு சேர்த்து ஒரு கிண்ண‌த்தில் எடுத்து வைக்கவும்.தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.இது சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்.
கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கீரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும்.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும்.இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்.

மணத்தக்காளி இலை பொரித்த குழம்பு

தேவையான பொருள்கள்:
நன்கு ஆய்ந்து நறுக்கிய மணத்தக்காளி இலை - 1 கப்
துவரம்பருப்பு  - 50 கிராம்
கடுகு        - 1 டீஸ் பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய்  -  4 டீஸ்பூன்
மிளகு      - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறுதுண்டு
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்     -  1 சிட்டிகை
உப்பு       - தேவைக்கேற்ப
செய்முறை:
துவரம் பருப்பையும், மணத்தக்காளி கீரையையும் நன்றாகக்கழுவி  குக்கரில் அளவாக தண்ணீர் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து  மூன்று விசில் சத்தம் வரும் வரை வைத்து வேகவைக்கவும்.  இரண்டு ஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு சூடு படுத்தி அதில் மிளகு, ஒரு டீஸ் பூன் உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து, கடைசியில் துருவிய தேங்காயையும் போட்டு ஒருமுறை பிரட்டி எடுக்கவேண்டும். வறுத்த சாமான்களை மிக்சியில் நன்றாக அரைத்து வேக வைத்துள்ள பருப்பு கீரை கலவையில் கொட்டி கொதிக்க விடவேண்டும். தேவைக்கேற்ப உப்பு போடவேண்டும், எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்பொழுது 1 டீஸ்பூன் அரிசிமாவை 4 ஸ்பூன் தணிணீர்விட்டு கரைத்து கொதிக்கும் குழம்பில் விடவேண்டும். எல்லாம் ஒன்று சேர்ந்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து கடுகு உளுத்தம் பருப்பை தாளித்துக்  கொட்டவேண்டும். சூடான சாதத்தில் நெய்விட்டு மணத்தக்காளி கீரை பொரித்த குழம்பை பிசைந்து சாப்பிடவேண்டும்.மணத்தக்காளி குழம்பு வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.

Sunday, March 2, 2014

முருங்கைக்கீரை சாம்பார்

தேவையானப் பொருள்கள்:
துவரம்பருப்பு-1/4 கப்
முருங்கைக்கீரை-ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம்-5
தக்காளி-பாதி
பச்சைமிளகாய்-1
பூண்டுப்பல்-2
மஞ்சள்தூள்-சிறிது
மிளகாய்த்தூள்-ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப்பூ-ஒரு டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்-சிறிது
காய்ந்தமிளகாய்-1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு குக்கரில்(அ)பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.
நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.
இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.
இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Wednesday, February 26, 2014

முடக்கத்தான் இலை சூப்

தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் இலை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன் 
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ப.மிளகாய் - 2
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.முடக்கத்தான் இலை நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.  கடைசியாக இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்த்து இறக்கவும்..  48 நாட்கள் தொடர்ந்து இந்த சூப்பை குடித்து வந்தால், சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும்.

மிளகு - கோதுமை தோசை

தேவையான பொருட்கள்: 
கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

 வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை ஒன்றும் பாதியாக உடைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இப்போது  மிளகு - கோதுமை தோசை தயார் .

Sunday, February 2, 2014

எள்ளு லட்டு

தேவையான பொருட்கள்: 
வெள்ளை எள்ளு - 1 கப் 
வெல்லம் - 1 கப் 
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
 ஏலக்காய் - 2 (பொடி செய்தது) 
தண்ணீர் - 1/2 கப் 
செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளை போட்டு தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு, வெல்லப் பாகுவை ரெடி செய்ய வேண்டும். பாகு நன்கு கெட்டியாகும் போது, அதில் வறுத்து வைத்துள்ள எள்ளு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, நெய்யை சேர்த்து கிளறி, இறக்கி வைக்க வேண்டும். இறுதியில் கலவையானது ஓரளவு சூடாக இருக்கும் போதே, அதனை லட்டுகளாக பிடிக்க வேண்டும். 
குறிப்பாக லட்டு பிடிக்கும் போது, கையில் லேசாக தண்ணீரால் நனைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், லட்டானது 10-15 நாட்கள் நன்றாக இருக்கும்.

தினை தக்காளி தோசை

 தேவையான பொருட்கள்:
 தோசை மாவு - 1 கப் 
சோளம் - 1 கப் 
தினை - 1 கப் 
தக்காளி - 2 (நறுக்கியது)
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
செய்முறை: 
முதலில் சோளம் மற்றும் தினையை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு அரைத்துக் கொண்டு, தோசை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து, 8 மணிநேரம் ஊற வைத்து புளிக்க விட வேண்டும்.  பின்பு அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான தினை தக்காளி தோசை ரெடி.

Saturday, February 1, 2014

பொட்டுக்கடலை வடை

தேவையான பொருட்கள்: 
 பொட்டுக்கடலை - 1/2 கப் 
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
முந்திரி - சிறிது
 வெங்காயம் - 1 (நறுக்கியது)
 பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
 கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை: 
முதலில் மிக்ஸியில் பொட்டுக்கடலை, முந்திரி, கசகசா, சோம்பு போட்டு, நன்கு நைஸாக அரைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடேறியதும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவுக் கலவையை எலுமிச்சை பழ அளவில் எடுத்து, லேசாக தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பொட்டுக்கடலை வடை ரெடி.இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

பாசிபயறு அல்வா

தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு-1 கப்
நெய்-1/2 கப்
சர்க்கரை-1 கப் வேண்டும்
பால்- 1/2 கப்
முந்திரி -/ அழகுபடுத்த ( நெய்யில் வறுத்தது )
ஏலக்காய் தூள்- 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ
செய்முறை:
பாசிபயறு இரவு முழுவதும் ஊற வைக்கவும் .
பிறகு தண்ணிரை வடித்து நன்றாக அரைத்துகொள்ளவும் .
ஒரு அடி கனமான கடாயில் நெய் விட்டு முந்திரி திராச்சையை வருத்துகொள்ளவும்.
பிறகு மேலும் நெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும் நன்றாக வதக்கவும்
கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கட்டி படாமல் கிளறவும் .
பிறகு பால் ,சர்க்கரை சேர்த்து கை விடாமல் வேகவைக்கவும் .
 நெய் வெளியில் கசிந்து வரும் வரை வேக வைக்கவும் .
நெய் வெளியே வந்தவுடன் முந்திரி திராச்சையை சேர்த்து பரிமாறவும்.
    சுவையான வித்தியாசமான அல்வா ரெடி 
  குறிப்பு : (பாசிபயறு வறுத்து ஊற வைத்தால் சுவையும் மணமும் கூடும்)

Wednesday, January 29, 2014

காளான் கோஸ் கறி

தேவையானவை :
காளான்  - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை :
காளான்  மற்றும் கோஸை நறுக்கி உப்பு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் காளான்  , கோஸ் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு தூள் வகைகள் சேர்க்கவும். தண்ணீர் விடாமல் காளான்  சுருள வேகும் வரை வேகவிட்டு, கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

காய்கறி வெண்ணெய் தோசை

தேவையான பொருட்கள் :
தோசை மாவு - ஒரு கப்
காலிஃப்ளவர் - பாதி அளவான பூ
காரட் - 2
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய வெண்ணெய் துண்டுகள் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :
காலிஃப்ளவரை சிறிதாக உதிர்த்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைக்கவும். உருளைக்கிழங்கை நீளமான வடிவில் நறுக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். காலிஃப்ளவர், காரட், பட்டாணி ஆகியவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (அனைத்து காய்களையும் கிழங்கு உட்பட - இட்லி தட்டில் ஒரே தட்டில் வேகவைத்து எடுக்கலாம்).
அடுப்பில் தோசைக் கல்லை காயவைத்து, தோசை மாவை எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றவும். (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
வேக வைத்த காய்கறிகளையும், நறுக்கிய தக்காளியையும் தோசை மேல் தூவி அலங்கரிக்கவும். பிறகு வெண்ணெய் துண்டுகளையும் மேலே தூவவும்.
தோசையை மூடி போட்டு, மிதமான தீயில் அப்படியே வேகவிடவும். (திருப்பிப் போட வேண்டாம்). காய்கறிகள் ஏற்கனவே வெந்திருப்பதால். வெண்ணெய் முழுவதும் உருகிவிடாமல் லேசாக சூடாகி, மென்மையாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

Saturday, January 25, 2014

கோதுமை அல்வா

தேவையானவை :
கோதுமை - 1 கப்
பால் - 2 கப்
ஏலக்காய்த்தூள் - 2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
சர்க்கரை - 6 கப்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
நெய் - 2 கப்
செய்முறை :
கோதுமையை முதல்நாளே ஊறவைக்கவும். மறுநாள் கிரைண்டரில் போட்டு அரைத்த தூய்மையான வெள்ளைத்துணி அல்லது வடிகட்டியில் போட்டு  பிழிந்து பால் எடுத்து கொள்ளவும். ஒரு அடிகனமான வாணிலியில் 6 கப் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் வரை நீர் ஊற்றி ஒற்றை கம்பி  பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும். ஆட்டிஎடுத்த கோதுமைப் பாலையும், சாதாரண பாலையும் பாகுடன் சேர்த்துக் கிளறவும். நன்றாக கெட்டியாகக்  கிளறி அகலமான தட்டில் கொட்டி முந்திரி தூவி அலங்கரிக்கவும். சுவையான கோதுமை அல்வா ரெடி.

கலவை பருப்பு உருண்டை

தேவையானவை :
வெள்ளை காராமணி,
கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு,
பச்சரிசி (ரவையாக உடைத்தது) - தலா 1/2 கப்,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - 6,
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை :
பருப்பு வகைகளுடன் மிளகு, காய்ந்த மிளகாய், பச்சரிசி சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் தேங்காய் சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுக்கவும். பெருங்காயத் தூள், உப்பு, வெண்ணெய், சோடா உப்பு, சீரகம் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். சீடை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும். மாவை பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதிக நேரம் வைத்திருக்காமல் உடனே பொன்னிறமாக பொரித்து எடுத்து, வடித்துப் பரிமாறவும்.  இது கரகரப்பாக, ருசியாக இருக்கும்.

தினை பொங்கல்

தேவையானவை :
தினை அரிசி - 1/4 கிலோ
பாசிபருப்பு - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
இஞ்சி - 1 துண்டு
மிளகு , சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கடாயில் தினை அரிசியை போட்டு நிறம் மாறும் வரை வறுக்கவும்.பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.இரண்டையும் சேர்த்து 1:21/2 என்ற் விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவைக்கவும்.பின் நெய்யில், முந்திரி,இஞ்சி,மிளகு, சீரகம்,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து , வேகவைதத தினையில் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக் கலக்கிதேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

Friday, January 10, 2014

எலுமிச்சை சூப்

தேவையானவை:
எலுமிச்சம் பழம் – 3
காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
செய்முறை:
 ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
 இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக  இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்).
 அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும்.
 சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.

கடலைப் பருப்பு மரவள்ளி புட்டு

தேவையானவை :
கடலைப் பருப்பு -  1/2கிலோ,
பொடித்த வெல்லம் – 1  கப்,
நெய்யில் வறுத்த முந்திரி – 10 (தூள் செய்தது),
திராட்சை – 10,
ஏலக்காய் தூள் சிறிது.
துருவிய தேங்காய் – 1 கப்,
நெய் 3 மேசைக் கரண்டி,
மரவள்ளிக் கிழங்கு வேகவைத்து துருவியது – 1 கப்.
செய்முறை :
கடலைப் பருப்பை உதிர் உதிராக வேகவைத்து  வடித்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், பொடித்த கடலைப்பருப்பைப் போட்டு நன்றாக வதக்கவும். அது உதிரி உதிரியாக வந்ததும் தேங்காய், ஏலக்காய் தூள், சுத்தமான பொடித்த வெல்லம், துருவிய மரவள்ளிக் கிழங்கு சேர்த்து வதக்கி புட்டு பதம் வந்ததும் திராட்சை, முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும். அம்மனுக்கு புட்டு ரெடி. இதே போன்று மரவள்ளிக்கிழங்கு சேர்க்காமல்  பாசிப்பருப்பிலும் செய்யலாம். அவல், அரிசி மாவிலும் செய்யலாம்.

கொள்ளு மசியல்

தேவையானவை :
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
சிறிய வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை – 10 இலைகள்
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
 மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

அன்னாசிப்பழ பொரியல்

தேவையானவை :
அன்னாசிப் பழம் (பொடியாக நறுக்கியது) – 1 கப்,
வெங்காயம் – 2,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
இஞ்சி – 1 துண்டு,
கடுகு, உளுந்து,
கறிவேப்பிலை – தாளிக்க,
மிளகாய் – 3,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன். 
செய்முறை :
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து வறுத்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து, நன்கு வதக்கவும்.  இஞ்சியை பொடியாக நறுக்கி அதையும் வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அன்னாசிப்  பழத்தையும் போட்டு நன்கு வதக்கி, உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

Sunday, January 5, 2014

கொண்டைக் கடலை குருமா

தேவையானவை 
தக்காளி - 100 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
கேரட், பீன்ஸ்  150 கிராம்,
உருளைக் கிழங்கு - 1/4 கிலோ,
பூண்டு - 2 ,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 6,
தேங்காய் - ஒரு மூடி,
கொண்டைக் கடலை - 100 கிராம்,
பட்டை, கிராம்பு, சோம்பு - தேவையான அளவு,
கறி மசாலா, மஞ்சள் தூள் - தேவையான அளவு
கறி வேப்பிலை, மல்லித் தழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நன்றாகக் கொதித்த எண்ணெயில் தக்காளி, வெங்காயம், பட்டை, கிராம்பு, அரைத்த இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதித்தபிறகு, மிளகாய், மல்லி, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, கேரட், பீன்ஸ், உருளை, கொண்டைக் கடலை, கீறிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். நன்கு கொதித்த பிறகு, மல்லித்தழைபோட்டு இறக்கினால் சூடான குருமா ரெடி!

Saturday, January 4, 2014

வெஜிடேபிள் கறி

தேவையான பொருட்கள்: 
கடலை மாவு - 1/2 கப் 
புளித்த தயிர் - 2 கப் 
தண்ணீர் - 5-6 கப் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
வெந்தயம் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
வரமிளகாய் - 3-4 
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) 
பச்சை பட்டாணி - 1/4 கப் 
வெண்டைக்காய் - 8 (நறுக்கியது) 
காலிஃப்ளவர் - 1/4 கப் 
உருளைக்கிழங்கு - 1/4 கப் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 2 டீஸ்பூன் 
தாளிப்பதற்கு
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
 செய்முறை: 
முதலில் தயிரை நன்கு அடித்துக் கொண்டு, பின் அதில் கடலை மாவை கொஞ்சமாக போட்டு கலந்து, வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு தாளித்து, பின் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயத்தைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும். அடுத்து கடலை மாவு கலவையை வாணலியில் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 30-40 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெஜிடேபிள் கறி  ரெடி.
 இறுதியில் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கி, பின் மிளகாய் தூளை சேர்த்து செய்து வைத்துள்ள கறியில் ஊற்ற வேண்டும். இந்த கறி ரெசிபியானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
பல்வேறு காய்கறிகளைப் பயன்படுத்துவதால், இது ஒரு ஆரோக்கியமான வெஜிடேபிள் கறி.


கம்பு பிஸ்கட்





தேவையான பொருட்கள் 
கோதுமை மாவு - 70 கிராம்
கம்பு மாவு      - 30 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை பொடி - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - 0.5 கிராம்

செய்முறை
  • கோதுமைமாவுடன் கம்பு மாவு, பேக்கிங் பவுடர் சேர்து சலிக்கவும்.
  • சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து கிரீம் செய்யவும்
  • கிரீமுடன் சலித்த மாவும் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும்.  மாவு உருட்டி பிஸ்கட் அச்சுகளில் வெட்டவும்.
  • அடுமனையில் 140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிம் சூடு செய்யவும்.
  • ஆறவைத்து டப்பாவில்  அடைக்கவும்.
  • பிஸ்கட் உலக அளவில் மிகவும் பிரபலமாக  கிடைக்கும் பலகாரம் ஆகும்.  கோதுமை மாவு சிறிது நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கம்பு மாவு சேர்த்து செய்யப்படுகிறது. 

கம்புதயிர் வடை

தேவையான பொருட்கள்:
கம்பு மாவு – 300 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
தயிர் – 4 கப்
சீரகத் தூள் – 4 டீஸ்பூன்
பெரிய வெங்காயத்துருவல் – 1 கப்
கொத்தமல்லி – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை:
கம்பு மாவுடன் அரிசி மாவைச் சேர்த்து, உப்பு கலந்து மசால் வடை பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் பச்சை மிளகாய், சீரகத்தூளை சேர்த்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். தயிரை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து அதில் கலக்கவும். இதில் அவித்த கம்பு வடைகளை ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். தட்டில்  பரிமாறும் முன், வெங்காயத்துருவல், கொத்தமல்லித் தழையை தூவி விடவும். கோடை காலத்திற்கேற்ற சத்தான டிபன், உடலுக்கு குளிர்ச்சி தரும். அனைத்து வயதினருக்கும் உகந்தது. கம்பங்கூழ் பிடிக்காத குழந்தைகள் கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்

Thursday, January 2, 2014

காளான்சாண்ட்விட்ச்

தேவையானவை :
காளான்  – 50 கிராம்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 2,
இஞ்சி,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
குடைமிளகாய் – 1,
உப்பு – தேவைக்கேற்ப,
கரம் மசாலா – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -  கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் – தேவைக்கேற்ப,
கொத்தமல்லி – 1 கைப்பிடி,
புதினா – அரை கட்டு.
செய்முறை :
முதலில் காளானைக் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயுடன் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் வைத்து சாண்ட்விட்ச் செய்யவும். கொத்தமல்லி சட்டினி (அல்லது) புதினா சட்னி தொட்டுக் கொள்ள ஏற்றது.
 இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமாக உள்ளது.  ரத்த ஓட்டத்துக்கும் கூரிய பார்வைக்கும் வழிவகுக்கும்.

தக்காளி பஜ்ஜி

தேவையானவை :
கடலை மாவு – 150 கிராம்
நாட்டுத் தக்காளி – 6
பெருங்காயம் – கால் டேபிள்ஸ்பூன்
பூண்டு – 5 பல்
குறுமிளகு – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பொரி – 100 கிராம்
எழுமிச்சைப்பழம் – 1
பச்சைமிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 1
கொத்தமல்லி – 1 கொத்து.
செய்முறை :

பூண்டு, குறுமிளகை அரைத்து கடலைமாவில் சேர்த்து, அதில் பெருங்காயத்தையும் உப்பையும் கலந்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்  கொள்ளுங்கள்.
தக்காளியை நன்கு கழுவி இந்த மாவில் போட்டுக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  மாவோடு சேர்த்து தக்காளியை போட்டு வேகவைத்து எடுங்கள்.
 இன்னொரு பாத்திரத்தில் பொரியைக் கொட்டி, வெங்காயம், பச்சை மிளகாயை  சிறுசிறு துண்டுகளாக வெட்டி பொரியில் போட்டு எலுமிச்சைப்பழத்தைப் பிழித்து விட்டு, கொத்தமல்லியை வெட்டிப் போட்டு நன்கு பிசைந்து  கொள்ளுங்கள்.
தக்காளி பஜ்ஜியை இரண்டாக வெட்டி நடுவில் இந்த பொரிக்கலவையை அள்ளி வைத்து பரிமாறுங்கள்.
 வித்தியாசமான ஆந்திரா தக்காளி  பஜ்ஜி ரெடி.

முருங்கைத் தண்டு சூப்


தேவையானவை :
முருங்கைக் கீரையின் தண்டுகள், காம்புகள் – 1 கைப்பிடி,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 6 பல்,
சின்ன வெங்காயம் – 4,
தக்காளி – 1,
மிளகு – அரை  டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
முருங்கைத் தண்டுகளையும் காம்புகளையும் நன்றாக இடிக்கவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து இடித்து மிளகு, சீரகம், மஞ்சள் தூள்,  உப்பு சேர்த்து, தக்காளி நறுக்கிப் போட்டு நிறைய தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும். வெந்ததும் விசிலை எடுத்துவிட்டு நன்கு கடையவும். பிறகு, 1 பங்கு  தண்ணீர் 1/4 பங்காக வற்றும் வரை கொதிக்க வைத்து சாப்பிடவும்.
 வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டால் அதிகமாக சிறுநீர் பிரியும். உடலில் உள்ள கெட்டக் கழிவுகள் சிறுநீராக வெளியேறும். உடல் புத்துணர்ச்சி பெறும்.  ஊளைச் சதை தானாகக் குறையும்.இந்த முருங்கைத் தண்டு சூப் கொழுப்பை கரைக்கும்.

கொள்ளு சூப்


 தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2
 செய்முறை