சாம்பார் பொடி
தேவையான பொருட்கள் :
வரமிளகாய் -அரை கிலோ
மல்லி விதை -அறுநூற்றைம்பது கிராம்
துவரம் பருப்பு - நூறு கிராம்
கடலைப் பருப்பு - நூறு கிராம்
வெந்தயம் - பத்து கிராம்
மிளகு - பத்து கிராம்
கட்டி பெருங்காயம் - இருபது கிராம்
விரலி மஞ்சள் - இருபது கிராம்
செய்முறை :
மஞ்சள், பெருங்கயத்தை சிறிய கட்டிகளாகத் தட்டி வைக்கவும். (பொடித்து விட வேண்டாம்)
மிளகாயை காம்பு நீக்கி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து முதலில் பெருங்காயத்தைப் போட்டு பொரியும் வரை வறுக்கவும்.
பிறகு அதிலேயே மஞ்சள், மிளகு, வெந்தயம், பருப்புகள் எல்லாவற்றையும் போட்டு நிறம் மாற ஆரம்பிக்கும் வரை வறுத்து இறக்கவும். (அதிகம் சிவக்க வேண்டாம்)
மல்லியை இளம் சூட்டில் நான்கு நிமிடம் வறுக்கவும்.
மிள்காயைப் போட்டு இளம் சூட்டில் ஐந்து நிமிடம் வறுக்கவும்.
எல்லாவற்றையும் சூடு ஆறும்வரை ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்.
குறிப்பு:
பொடி அரைக்கும் முன்னும் பின்னும் சூடு ஆறும் வரை காய வைத்தால் போதுமானது. அதிக நேரம் பரப்பி ஆற வைத்தால் வாசனை கம்மியாக உள்ளது போல் இருக்கும். கட்டிப் பெருங்காயம் சாம்பார் பொடிக்கு மிகவும் உகந்தது. இந்தப் பொடி பெருங்காயம் சேர்ப்பதால் சாம்பர், வத்தல் குழம்பு, காரக் குழம்புகளுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும். பொதுவாக சாம்பார் செய்து இறக்கும் முன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவலுடன் கால் டீ ஸ்பூன் மல்லி விதை (பச்சையாக) சேர்த்து அரைத்து ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி கடுகு, உளுந்து, தட்டிய இரண்டு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து மேலே மல்லி இலை தூவி இறுக மூடி ஐந்து நிமிடம் கழித்து திறந்து உபயோகப் படுத்திப் பாருங்கள். சுவை அலாதியாக இருக்கும்

No comments:
Post a Comment