தேவையான பொருள்கள்:
நன்கு ஆய்ந்து நறுக்கிய மணத்தக்காளி இலை - 1 கப்
துவரம்பருப்பு - 50 கிராம்
கடுகு - 1 டீஸ் பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறுதுண்டு
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
துவரம் பருப்பையும், மணத்தக்காளி கீரையையும் நன்றாகக்கழுவி குக்கரில் அளவாக தண்ணீர் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து மூன்று விசில் சத்தம் வரும் வரை வைத்து வேகவைக்கவும். இரண்டு ஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு சூடு படுத்தி அதில் மிளகு, ஒரு டீஸ் பூன் உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து, கடைசியில் துருவிய தேங்காயையும் போட்டு ஒருமுறை பிரட்டி எடுக்கவேண்டும். வறுத்த சாமான்களை மிக்சியில் நன்றாக அரைத்து வேக வைத்துள்ள பருப்பு கீரை கலவையில் கொட்டி கொதிக்க விடவேண்டும். தேவைக்கேற்ப உப்பு போடவேண்டும், எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்பொழுது 1 டீஸ்பூன் அரிசிமாவை 4 ஸ்பூன் தணிணீர்விட்டு கரைத்து கொதிக்கும் குழம்பில் விடவேண்டும். எல்லாம் ஒன்று சேர்ந்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து கடுகு உளுத்தம் பருப்பை தாளித்துக் கொட்டவேண்டும். சூடான சாதத்தில் நெய்விட்டு மணத்தக்காளி கீரை பொரித்த குழம்பை பிசைந்து சாப்பிடவேண்டும்.மணத்தக்காளி குழம்பு வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.
No comments:
Post a Comment