தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை உப்பு நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டிவிட்டு, தனியாக காலிஃப்ளவரை வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரைப் போட்டு மிதமான தீயில் 5-6 நிமிடம் வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் மீதமுள்ள 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் பேஸ்ட், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் அரைத்த தக்காளியை ஊற்றி, 2-3 நிமிடம் கிளறி விட்டு, காலிஃப்ளவர், உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி கிளறி, 5-6 நிமிடம் குறைவான தீயில் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியில் மூடியைத் திறந்து, அதில் கரம் மசாலா சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், காலிஃப்ளவர் குழம்பு ரெடி.

No comments:
Post a Comment