தேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு - கால் கப்,
துவரம்பருப்பு - அரை கப்,
அரிசி மாவு - ஒன்றரை கப்,
மல்லித்தழை-புதினா-இஞ்சி (பொடியாக அரிந்தது) - கால் கப்,
பச்சை மிளகாய் - 5,
கேரட் துருவல் - கால் கப்,
கோஸ் துருவியது - கால் கப்,
பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
எண்ணெய் - ஒன்றரை கப்.
செய்முறை:
மூன்று பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், ஊறவைத்த பருப்பு, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். பின்னர், அரைத்த விழுதுடன் மல்லித்தழை, புதினா, துருவிய கேரட், கோஸ், வெங்காயம், அரிசிமாவு எல்லாவற்றையும் கலந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, ஒரு ஏந்தலான கரண்டியால் மாவை எடுத்து, எண்ணெயில் விட்டு, ஒவ்வொரு கச்சோரியாக பொரித்தெடுக்கவும். வெஜிடபிள் கச்சோரி: இதில், அரிசிமாவுக்கு பதிலாக ரவை சேர்த்துச் செய்தால், சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். பண்டிகைகளில் வழக்கமாக செய்கிற வடைக்கு பதில் இதைச் செய்யலாம்.
No comments:
Post a Comment