தேவையானவை:
கடலைப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை
ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும்
இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை
கிள்ளிப் போட்டு... வேக வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து,
உப்பு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி
இறக்கவும்.
No comments:
Post a Comment