தேவையானவை:
பச்சைப் பயறு - 200 கிராம்,
வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
பச்சைப்
பயறை லேசாக வறுத்து, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில்
வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தைப் பொடித்து, நீரில்
கரைத்து சிறிது கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடிப்பில் ஏற்றி பாகு
காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த பயறை தண்ணீர் வடித்து சேர்த்து,
ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
No comments:
Post a Comment