Monday, September 30, 2013

பனீர் பாயசம்

தேவையானவை:
பால் - 1 லிட்டர்,
பனீர் - 200 கிராம்,
சர்க்கரை - முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
 செய்முறை: 
பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, பாதியளவு ஆகும்வரை கொதிக்கவிடுங்கள். அடிக்கடி கிளற வேண்டாம். மேலே படியும் ஏடுகளை பாத்திரத்திலேயே ஓரிடத்தில் ஒதுக்கிவிட்டு, கொதிக்க விடுங்கள். பின், அடுப்பை அணைத்துவிடுங்கள். பனீரைச் சிறு துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள். குக்கரில் சர்க்கரையைப் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை கொதிக்க விடுங்கள். பின்னர், அதில் பனீர் துண்டுகளைப் போட்டு மூடி, மூன்று விசில் வந்தவுடன் இறக்குங்கள். வெயிட்டை மெதுவாகத் தூக்கி, பிரஷரை வெளியேற்றிவிட்டு, சர்க்கரைப் பாகுடன் கூடிய பனீரை, ஏடு படிந்த பாலில் சேருங்கள். இந்தக் கலவையை ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்குங்கள்.
குறிப்பு: ஒரு அடுப்பில் பால் கொதித்துக் கொண்டிருக்க, இன்னொரு அடுப்பில் குக்கரை வைத்து, பனீர், பாகு கலவை தயாரித்தால், வேலை சுலபமாக முடியும்!

No comments:

Post a Comment