தேவையான பொருட்கள்
இஞ்சி - ஒரு கிலோ
பூண்டு - அரை கிலோ
எண்ணை (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசை கரண்டி
செய்முறை
முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தி அல்லது சின குழவியால் இடித்து கொள்ளுங்கள்.பிறகு குப்பை கொட்டும் இடத்தில் வைத்து லேசா புடைத்தால் அவ்வளவு பூண்டு குப்பையும் அதில் போய் விடும் இல்லை என்றால் வீடு முழுவது பூண்டு குப்பைதான்.. இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவி பிறகு பொடியாக வெட்டனும். பூண்டையும் அரிந்து கழுவி கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் கொஞ்ச கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைத்தெடுத்து அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணை கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு கண்டெயினரில் போட்டு பீரீஜரில் வைத்து விடுங்கள். பீரிஜரில் வைக்கும் போது முழுவது அடைத்து வைக்காதீர்கள்.வெடித்து வெளியே வந்துவிடும். மீதியை கிழே பிரிட்ஜில் வைத்து தினமும் தேவைக்கு பயன் படுத்தலாம்.
No comments:
Post a Comment