தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1 கிலோ,
மிளகுப் பொடி - 100 கிராம்,
கடுகு - 50 கிராம்,
வெந்தயம், மஞ்சள் பொடி - தலா 25 கிராம்,
உப்பு - 150 கிராம்,
பெருங்காயப் பொடி - 10 கிராம்,
எலுமிச்சம் பழம் - 12,
நல்லெண்ணெய் - 100 கிராம்.
செய்முறை:
பாகற்காயை தண்ணீர் விட்டுக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, வட்ட வில்லைகளாக நறுக்கவும். கடுகு, வெந்தயத்தைத் தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்து, பொடி செய்யவும். ஜாடியில் பாகற்காய் வில்லைகளைப் போட்டு, உப்புப் பொடி, மஞ்சள் பொடி, மிளகுப் பொடி, கடுகு, வெந்தயப் பொடி எல்லாவற்றையும் சேர்க்கவும். நல்லெண்ணையைக் காய்ச்சி ஜாடியில் ஊற்றவும். சிறிது ஆறிய பின்பு, எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கவும். நான்கு நாட்களில் ஊறி விடும். எலுமிச்சம் பழம் சேர்ப்பதால், பாகற்காயின் கசப்பு தெரியாது.
குறிப்பு:
இது நீரிழிவு நோய்க்காரர்களுக்கு மிகவும் நல்லது. இதைத் தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

No comments:
Post a Comment