தேவையானவை:
முற்றிய முருங்கைக்காய் - 10,
கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப்,
சோம்புத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி விழுது,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
அரிசி மாவு, நறுக்கிய பூண்டு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முருங்கைக்காய் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும், சதையை வழித்தெடுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல், அரைக்கவும். கடலைப்பருப்பை ஊற வைத்து, மசால் வடை பதத்தில் அரைக்கவும். இதனுடன் முருங்கை விழுது, (எண்ணெய் நீங்கலாக) மற்ற எல்லாவற்றையும் கலந்து சிறு வடைகளாகத் தட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடைகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

No comments:
Post a Comment