Wednesday, October 16, 2013

கேரட் கீர்


தேவையான பொருட்கள் :
பால் - ஒரு லிட்டர்,
துருவிய கேரட் - 11/2 கப்,
சர்க்கரை - ஒரு கப்,
மெல்லிய ரவை - 3 டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு - சிறிது,
குங்குமப்பூ - சிறிது.
செய்முறை : 
துருவிய கேரட்டை பாலில் நன்கு மென்மையாகும் வரை வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறி விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து ரவையை கட்டி தட்டாதபடி, பாலுடன் கலக்கவும். இத்துடன் முந்திரிப் பருப்பைச் சேர்த்துக் கலவை திக்காகும் வரை கொதிக்க விடவும். பிறகு சிறிது இளஞ்சூடான பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, இறக்கும்முன் சேர்க்கவும். இதனைக் குளிர வைத்து பரிமாறவும்

No comments:

Post a Comment