Wednesday, October 16, 2013

கோபி தோசை


 தேவையான பொருட்கள் : 
 காலி பிளவர் 2 பெரிய கப்,
கடலை மாவு ஒரு கப்,
உப்பு, மி.தூள் தேவையான அளவு, எண்ணெய் அல்லது நெய்,
ஜீரகம் -1 ஸ்பூன்
கொத்துமல்லித்தழை,
கறிவேப்பிலை,
பெருங்காயப் பொடி.
செய்முறை : 
கடலை மாவை சுத்தம் செய்து அதில் பொடியாக நறுக்கிய காலி பிளவர் உப்பு, மி.தூள், பெருங்காயப் பொடி, ஜீரகம், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை இவற்றைப் போட்டு தோசை மாவு பதத்தில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லைக் காய வைத்து ஒரு கரண்டி மாவு ஊற்றி லேசாகத் தேய்க்கவும் மேலே ஒரு கரண்டி நெய்விட்டு மெல்லிய தீயில் வேகவிட்டுத் திருப்பிப் போடவும் இன்னும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி பொன்னிறமாக முறுகலாக வெந்ததும் எடுங்கள். சுடச்சுட தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியுடன் பரிமாறுங்கள்

No comments:

Post a Comment