Friday, October 18, 2013

பரங்கி விதை பாயசம்

தேவையானவை: 
காய வைத்து உரித்த பரங்கி விதை - ஒரு கப்,
கசகசா - 3 டேபிள்ஸ்பூன்,
பால் - சிறிதளவு,
தேங்காய்ப்பால் - 3 கப் (முழு தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் எடுத்து தனித்தனியே 3 கப்களில் வைக்கவும்),
சர்க்கரை - கால் கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு - தலா 20 கிராம்,
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
 செய்முறை: 
கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து, பாலில் ஊற வைத்து, விழுதாக அரைக்கவும். பரங்கி விதைகளைக் காய வைத்து உரித்து (பெரிய கடைகளில் பாலிஷ் செய்து ரெடிமேடாகவும் கிடைக்கும்), சிறிது பாலை விட்டு விழுதாக அரைக்கவும். தேங்காயின் மூன்றாம் பாலை ஒரு கடாயில் ஊற்றி... அரைத்த கசகசா, பரங்கி விதை விழுதுகளைப் போட்டுக் கை விடாமல் கலக்கி, இரண்டாம் பாலையும் சேர்க்கவும். தேவையானால் வெந்நீர் சேர்க்கலாம். நன்றாகக் கொதித்ததும், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, முதல் பாலைச் சேர்த்து கிளறி, எசன்ஸ் போட்டு இறக்கவும். முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொட்டவும்.

No comments:

Post a Comment