Tuesday, October 1, 2013

பகோடா குழம்பு

தேவையானவை:
 புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
 பகோடாவுக்கு: 
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்க  
செய்முறை:
 *கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி சோம்பு+உப்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக நீர் விடாமல் அரைக்கவும். *அதனுடன் வெங்காயம்+கொத்தமல்லித்தழை சேர்த்து பகோடாகளாக பொரித்தெடுக்கவும். *பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வடகத்தைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+சாம்பார் பொடி+உப்பு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். *குழம்பு நன்கு கொதித்ததும் பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும். : கடலைமாவிலும் பகோடாவை செய்து போடலாம்.

No comments:

Post a Comment