Friday, October 25, 2013

சாக்லேட் பாதுஷா




தேவையானவை:  
மைதா மாவு - 150 கிராம், 
சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, 
 சர்க்கரை - 250 கிராம், 
பால் - ஒரு டீஸ்பூன், 
சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், 
எண்ணெய் - கால் கிலோ, 
நெய் - 2 டீஸ்பூன், 
கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், 
தயிர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
 சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து... மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் - சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல்  தூவி பரிமாறவும்.
குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.

No comments:

Post a Comment