Friday, October 11, 2013

சுக்கு குழம்பு

தேவையான பொருட்கள்
 சுக்கு - 1 அங்குலத்துண்டு
சின்ன வெங்காயம் -15
தக்காளி - 1
கறிவேப்பில்லை -சிறிது
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுபல் - 10
செய்முறை: 
 *வெங்காயம்+பூண்டு+ அனைத்தையும் பொடியாக கட் செய்யவும்.சுக்கை நசுக்கிக் கொள்ளவும். *புளியை ஒரு கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும். *ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சுக்கை வறுத்து தனியாக வைக்கவும். *வறுத்த சுக்கு+தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும். *பின் வடகம்+கறிவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கவும். *வதங்கிய பின் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். *நன்கு கொதித்த பிறகு தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
 இந்த குழம்பு மறுநாள் சாப்பிட சூப்பரா இருக்கும்.

No comments:

Post a Comment