Wednesday, October 16, 2013

சாக்லெட் பூரி



தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1½ கப்,
மைதா - ஒரு கப்,
நெய் -½ கப்,
சாக்லேட் சாஸ் - ½ கப்,
நெய் (பொரிக்க) - ½ கப்
செய்முறை: 
மைதாவையும் கோதுமை மாவையும், ½ கப் நெய் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு சாக்லேட் சாஸை கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி நன்கு பிசையுங்கள். மாவு மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. தண்ணியாகவும் இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் மாவோடு சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். பிசைந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, பூரிகளாகத் தேய்த்து, வாணலியில் நெய்யை நன்கு சூடாக்கி அதில் தேய்த்த பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் பூரி வகை இது

No comments:

Post a Comment