Saturday, October 26, 2013

சுரைக்காய் பஞ்சு, விதை துவையல்

 தேவையானவை:
சுரைக்காயின் விதையுடன்கூடிய நடுப்பகுதி - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்),
காய்ந்த மிளகாய் - 3,
புளி - கொட்டைப்பாக்கு அளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: 
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: 
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியே சிவக்க வறுக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, சுரைக்காய் நடுப்பகுதியைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். இதனுடன் வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், புளி, தக்காளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுத் தேவையான தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். சட்னியாக வேண்டுமானால்... மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment