Friday, October 11, 2013

சாப்பிட அரிசி ஜாமூன்



  தேவையானவை: 
பச்சரிசி -- ஒரு கப்,
பால் - ஒரு கப்,
 தண்ணீர் - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், டால்டா - தேவையான அளவு,
முந்திரிப்பருப்பு - சிறிதளவு, ஏலப்பொடி - அரை டீஸ்பூன், பன்னீர் - ஒரு டீஸ்பூன். செய்முறை:
 அரிசியைக் கழுவி, பாலும், தண்ணீரும் கலந்து அதில் அரிசியை வேக விடவும். அரிசி பாதியளவு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்தெடுத்து, ஏலப்பொடி கலந்து வைக்கவும். வாணலியில் டால்டாவைப் போட்டு சூடாக்கவும். அரைத்த மாவை சிறிய குலோப்ஜாமூன் போல உருட்டி, நடுவில் பாதி முந்திரியை வைத்து மீண்டும் நன்றாக உருட்டவும். இதேபோல் எல்லா மாவையும் செய்து, சூடான டால்டாவில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும் (எண்ணெயிலும் பொரிக்கலாம்). மாவை சற்று நீளவாக்கில் உருட்டினால் பார்க்க அழகாக இருக்கும். பின் வேறொரு வாணலியில் சர்க்கரை அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். லேசான பாகு வந்ததும் இறக்கி பன்னீரை கலக்கவும். பாகு சூடாக இருக்கும் போதே ஜாமூன்களை போட்டு அரைமணி நேரம் ஊறியதும், தனியே எடுத்து வைக்கவும். மேலே சர்க்கரை தூவி அலங்கரிக்கவும். பார்க்க அழகாக இருக்கும். சாப்பிடவும் ருசியாக இருக்கும். அரிசி ஜாமூன்: ஒரு கப் அரிசி அரைத்த விழுது என்றால், அதில் சர்க்கரை சேர்க்காத கோவா கால் கப் சேர்த்து கலந்து உருட்டி ஜாமூன் செய்தால் மிருதுவாக இருக்கிறது. சுவையும் சூப்பர்

No comments:

Post a Comment