தேவையானவை:
பால் - 2 லிட்டர்,
சர்க்கரை - முக்கால் கப்,
சீவிய பாதாம், பிஸ்தா - தலா 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கார்ன்ஃபிளார் மாவு - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
வாயகன்ற, கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள். அடிக்கடி கிளறவேண்டாம் (அப்போதுதான் ஆடை படியும்). மேலே படியும் ஆடையை, ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துப் போட்டு, சேகரித்துக்கொண்டே வாருங்கள். பாலில் முக்கால் பாகம் வற்றி, கால் பங்குக்கு வந்ததும் சர்க்கரையைச் சேருங்கள். அத்துடன், கால் கப் தண்ணீரில் கரைத்த கார்ன்ஃபிளாரையும் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடுங்கள். பின்னர், சேகரித்து வைத்துள்ள ஆடையை அத்துடன் சேர்த்து, ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சீவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை அதில் கலந்து, ஆறவிட்டு, நன்கு குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

No comments:
Post a Comment