Saturday, October 5, 2013

ராகி வெஜ் அடை

 தேவையானவை:
 ராகி மாவு - ஒரு கப்,
 மாவாக்கிய கோதுமை ரவை (அ) கோதுமை மாவு - ஒரு கப், 
பச்சரிசி மாவு (விருப்பப்பட்டால்) - கால் கப்,
காய்கறி கலவை - ஒரு கப் (துருவிய கேரட், 
வெங்காயம், கோஸ், முள்ளங்கி), சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், 
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், 
நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு. 
செய்முறை
எல்லா பொருட் களையும் ஒன்று சேர்த்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வாழை இலை (அ) பாலித்தீன் ஷீட்டில் எண்ணெய் தடவி கனமான அடைகளாகத் தட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும். 

No comments:

Post a Comment