தேவையானவை:
பீட்ரூட் தோல் துண்டுகள் - 2 கப்,
இனிப்பில்லாத கோவா - அரை கப்,
சர்க்கரை - ஒரு கப்,
நெய் - கால் கப்,
ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், பாலில் கரைத்த குங்குமப்பூ - தலா அரை டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு - தலா 20 கிராம்.
செய்முறை:
பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து, புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கர் தட்டில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும், இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கடாயில் போட்டுக் கிளறவும். நீர் வற்றியதும், பாதி அளவு நெய் விட்டு கோவாவை உதிர்த்துச் சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும்... ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, பாலில் கரைத்த குங்குமப்பூவைக் கலந்து இறக்கவும். வறுத்த முந்திரி, திரட்சை, சாரைப்பருப்பை போட்டு, மீதமுள்ள நெய்யை விட்டு கலக்கவும்.

No comments:
Post a Comment