Saturday, October 12, 2013

மிக்ஸ்டு தால் பாயசம்



தேவையானவை: பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, மசூர் தால் - தலா அரை கப், வெல்லப் பாகு - ஒரு கப், சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், மில்க்மெய்டு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப் பருப்பு, திராட்சை, கொப்பரை தேங்காய் (சேர்த்து) - 50 கிராம்,  நெய் - 100 மில்லி.
செய்முறை:  பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, மைசூர்பருப்பு மூன்றையும் நன்கு கழுவி, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பருப்புகளை வேறொரு பாத்திரத் தில் சேர்த்து, அதனுடன் வெல்லப் பாகு, மில்க்மெய்டு, சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை, பொடியாக நறுக்கிய கொப்பரைத் தேங்காய் சேர்த்து வதக்கி, பாயசத்தில் சேர்த்து (நெய்யையும் சேர்க்கவும்), கலந்து, இறக்கி சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment