Saturday, October 26, 2013

வெண்டைக்காய் கறி

தேவையானவை:  
வெண்டைக்காய் - கால் கிலோ, 
வெள்ளை மொச்சை - 150 கிராம், 
பழைய புளி - 50 கிராம், 
மாங்காய் - ஒன்று, 
சின்ன வெங்காயம் - 100 கிராம், 
தக்காளி - 100 கிராம்,  
பச்சை மிளகாய் - 100 கிராம், 
பெருங்காயம் - சிறிதளவு, 
கடுகு - 2 டீஸ்பூன், 
வெந்தயம் - அரை டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், 
 நல்லெண்ணெய் - 100 மில்லி, 
பூண்டு - 50 கிராம், 
காய்ந்த மிளகாய் - 5, 
மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், 
கறிவேப்பிலை, உப்பு - தேவையானஅளவு.
செய்முறை:  
முந்தைய நாள் இரவே மொச்சையை ஊற வைத்து, அடுத்த நாள் தண்ணீரை வடித்துவிடுங்கள். குக்கரில் மொச்சை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவிடுங்கள். பழைய புளியில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து ஒரு கப்பில் கரைத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காயை புளிக்குழம்புக்கு போடுவது போன்ற நீளத்துக்கு வெட்டி, வாணலியில் போட்டு எண்ணெய் விடாமல் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு மிதமான சூட்டில் வதக்க வேண்டும். ஓரளவு வதங்கும்போதே மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு,  பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் கரைத்து வைத்த புளித் தண்ணீர், வதக்கிய வெண்டைக்காய் மற்றும் வேக வைத்த மொச்சையை சேர்த்து 15 முதல் 20 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கினால்... வெண்டைக்காய் மண்டி ரெடி. மேலும் புளிப்புக்காக மாங்காயையும் நறுக்கி இதோடு சேர்த்துக் கொள்ளலாம். மொச்சை பிடிக்காதவர்கள், வெள்ளை கொண்டைக்கடலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment