Saturday, October 12, 2013

சின்ன வெங்காய ஊறுகாய்

  தேவையான பொருட்கள்: 
சின்ன (சாம்பார்) வெங்காயம் - 1 கிலோ, 
வினிகர் (சிவப்பு நிறம்) - 500 மி.லி, 
உப்பு - 150 கிராம், 
மிளகாய்த் தூள் - 100 கிராம். 
செய்முறை: 
வெங்காயத்தைத் தோலுரித்து, சுத்தம் செய்து கொள்ளவும். ஜாடியில் வினிகரைக் கொட்டி, அதில் வெங்காயம், மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். வெங்காயம் வினிகரில் ஊறி, ஒரு வாரம் கழித்து சாப்பிட ருசியாக இருக்கும். குறிப்பு: இது தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும். ஸ்டார் ஹோட்டல்களில் இந்த ஊறுகாயை டேபிள் மீது வைத்திருப்பார்கள்.

No comments:

Post a Comment