நெல்லிக்காய்
விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது.
சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு
வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும். தேவை நெல்லிக்காயை வேகவைத்த தண்ணீர் - 4 கப் கார்ன் ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு செய்முறை பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்
No comments:
Post a Comment