Friday, October 18, 2013

நெல்லிக்காய் அல்வா


  தேவையானவை: 
நெல்லிக்காய் (வேகவைத்து மசித்தது) - ஒரு கப்,
துருவிய வெல்லம்-ஒன்றரை கப்,
முந்திரி - 10,
 பாதாம் - 10,
நெய் -கால் கப்,
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: 
நெல்லிக்காயை கழுவி, சுத்தம் செய்து குக்கரில் வேகவைத்து கொட்டைகளை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி, அதனுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு மை போல் அரைக்கவும். நெல்லிக்காய் விழுதுடன் முந்திரி , பாதாம் கலவையைக் கலந்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெல்லம் கம்பிப்பாகு பதத்தில் வந்ததும், அரைத்த கலவையை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறவும். இடையிடையே நெய் சேர்க்கவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து அல்வா பதம் வரும்வரை கிளறவும். உலர் பழங்கள் அல்லது முந்திரி, அக்ரூட் பழங்களால் அலங்கரிக்கவும். சுவையான சத்தான நெல்லிக்காய் அல்வா ரெடி! நெல்லிக்காய் அல்வா: வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையும், சிறிது குங்குமப்பூவும் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment