Friday, October 18, 2013

கேரட் தோல் கீர்

 தேவையானவை: 
கேரட் தோல் துண்டுகள் - ஒரு கப்,
பால் - 2 டம்ளர்,
பாதாம் மிக்ஸ் - அரை கப்,
சர்க்கரை - கால் கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
முந்திரி, திராட்சை - தலா 30 கிராம்.
 செய்முறை: 
கேரட்டை நன்றாக சுத்தம் செய்து, அதன் தோலை சீவி எடுக்கவும். உப்பு கரைத்த வெந்நீரில் அதை ஊற வைத்து, கழுவி நறுக்கவும். கடாயில் சிறிது பால் ஊற்றி, கேரட் தோலை அதில் வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேறு கடாயில் மீதமுள்ள பாலை ஊற்றி, கேரட் தோல் விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் பாதாம் மிக்ஸை கரைத்து ஊற்றி, சர்க்கரை சேர்த்து, கொதித்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் பாதாம் எசன்ஸ் சில சொட்டுகள் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment