தேவையானவை:
உருளைக்கிழங்கு,
கேரட், பீன்ஸ் போன்ற ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள்
- கால் கிலோ.
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
தண்ணீர் - 2
டம்ளர்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
தேவையான அளவு.
செய்முறை:
காய்கறிகள்
எல்லாவற்றையும் கழுவி, நறுக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும்,
காய்கறிகளைப் போட்டு, அதனுடன் மிளகாய்ப்பொடி, தேவையான உப்பு, மஞ்சள்தூள்,
பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து,
தண்ணீர் விட்டு, குக்கரை மூடி 'சிம்’மில் வேக வைக்க வேண்டும். இரண்டு
விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த காய்கறியில் இதைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.
No comments:
Post a Comment