Friday, July 19, 2013

இட்லி / தோசை பொடி --                                                                                                                                                                     தேவையான பொருட்கள்:
          உளுத்தம் பருப்பு -- 1 கப்
          வத்தல் -- 1 கப்
           பெருங்காயத்தூள் -- 1 1/2 டீஸ்பூன்
          கறிவேப்பிலை -- 2 இனுக்கு
          உப்பு -- தே.அ
          வெள்ளை எள் -- 2 ஸ்பூன் (வறுத்தது)

செய்முறை:
        வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு போட்டு 1 நிமிடம் வறுக்கவும்.
பின் வத்தல் , பெருங்காயம் , கறிவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் உப்பு, எள் சேர்த்து அரைக்கவும்.
காரமான ருசியான இட்லி பொடி ரெடி.
-----------------------------------------------

No comments:

Post a Comment