Monday, July 22, 2013

காளான் வதக்கல்

காளான் வதக்கல்
தேவையானவை: காளான் - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்),  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காளானை கழுவி நறுக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தேங்காயை கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு, பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும். காளான் பாதி வெந்த வுடன் அரைத்த தேங்காயை சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். சுருள வதங்கியவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இதை சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

No comments:

Post a Comment