தேவையானவை: முந்திரி, பாதாம், திராட்சை எல்லாம் சேர்த்து - அரை கப், டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு, பாசுமதி அரிசி - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். குக்கரில் தேங்காய்ப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்து, கழுவிய அரிசியை சேர்த்து மூடி, ஒரு விசில் வந்ததும் எடுக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, பாதாமை நன்கு வறுக்கவும். அடுப்பை நிறுத்தி, திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும் (டூட்டிஃப்ரூட்டியை அப்படியே ஃபிரெஷ்ஷாக வைக்கவும்). வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காயை தாளித்து... பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து நன்கு வதக்கி, கடைசியாக டூட்டிஃப்ரூட்டி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால்... விருந்தினர்களை 'ஒன்ஸ் மோர்’ கேட்கச் செய்யும்.
No comments:
Post a Comment