தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, பூண்டுப் பல் - 4, புளி - 100 கிராம், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், பூண்டுப் பல், இஞ்சி சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாகக் கிளறி, தேவையான உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். கடாயில் புளியைக் கரைத்து விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து... வேக வைத்த உருண்டைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு இறக்கி, கடுகு தாளிக்கவும்.
குறிப்பு: மசாலா வாசனையை விரும்புபவர்கள்... பருப்புடன் பட்டை, சோம்பு சேர்த்து அரைத்து குழம்பு செய்யலாம்.
குறிப்பு: மசாலா வாசனையை விரும்புபவர்கள்... பருப்புடன் பட்டை, சோம்பு சேர்த்து அரைத்து குழம்பு செய்யலாம்.
No comments:
Post a Comment