Saturday, July 27, 2013

ஓம மோர்க் குழம்பு

தேவையானவை: வெண்டைக்காய் - 10, சிறிது புளிப்பு உள்ள மோர் - அரை லிட்டர், ஓமம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓமம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்ததை மோருடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். வெண்டைக் காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பிரவுன் நிறமாகும் வரை வதக்கவும். இதை மோர் கலவையுடன் கலந்து, லேசாக சூடாக்கி, கொதிக்க ஆரம்பித்த உடன் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

No comments:

Post a Comment