Saturday, July 27, 2013

முள்ளங்கி சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெள்ளை முள்ளங்கி - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மில்லி.
செய்முறை: கோதுமை மாவுடன் 2 டீஸ்பூன் நெய் விட்டு, உப்பு சேர்க்கவும். முள்ளங்கியை தோல் சீவி, கேரட் துருவலில் துருவி, மாவுடன் சேர்த்து, மிளகுத்தூள் போட்டு, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வாட்டி எடுக்கவும்.
குறிப்பு: முள்ளங்கி யைப் பயன்படுத்தி தோசை,அடை போன்றவையும் தயா ரிக்கலாம்.

No comments:

Post a Comment