Saturday, July 27, 2013

தக்காளி கூட்டு

தேவையானவை: பச்சை தக்காளிகாய் - 6, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு,       மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: தக்காளியை நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்த்து, வேக வைத்த பருப்பையும் போட்டு கொதிக்க வைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: தக்காளிக்காயில், புளிப்பு இருப்பதால் புளி தேவை இல்லை. விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment