தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், நெய் - 6 டீஸ்பூன், கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு லேசாக வதக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். புதினாவை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு கடுகு தாளித்து, சீரகம், பொட்டுக்கடலை, இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், புதினாவை சேர்த்து வதக்கவும். வதக்கியதை சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும்.
No comments:
Post a Comment