தேவையானவை: பப்பாளி - ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு, தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பப்பாளியை 'கட்’ செய்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் முளைகட் டிய பச்சைப் பயறையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக் கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.
No comments:
Post a Comment