தேவையானவை: பூரி (சிறியது) - 10, அரிசிப் பொரி - ஒரு பாக்கெட் (சிறியது), பொட்டுக்கடலை - ஒரு சிறிய கப், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, பூண்டுப் பல் - 4, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையை பொரித்து எடுக்கவும். பூண்டுப் பல்லை தோல் உரித்து நசுக்கிக் கொள்ளவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து, வெடித்ததும் பொட்டுக் கடலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பூண்டுப் பல் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் பொரியைப் போட்டு கலந்து, பூரியை நொறுக்கிப் போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்

No comments:
Post a Comment