Tuesday, July 23, 2013

மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

எண்ணை - ஒரு குழிக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், - தலா 2
பிரிஞ்சி இலை

செய்முறை

* மட்டனைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை ஆகியவைகளை நறுக்கி கொள்ளவும்.

* பிரஷர் குக்கர் அல்லது அடி அகலமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.

* நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இலை இவைகளை சேர்த்து வதக்கவும்.

* அதனுடன் மட்டனை சேர்த்து வதக்கி, தொடர்ந்து தனியாத் தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி மட்டனை நன்கு வேக விடவும்.

* மட்டன் வெந்த பிறகு அரிசியைப் போல ஒன்றரை மடங்கு நீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

* தண்ணீர் கொதித்ததும் அரிசியைப் போட்டு குக்கரை மூடி வேக வைக்கவும்.

* இரண்டு விசில் சப்தம் வந்ததும் குறைந்த தீயில் வைத்திருந்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

* பாத்திரத்தில் வைக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து `தம்` சேர்த்து இறக்கவும்.

* கலர் தேவைப்படுபவர்கள் ஒரு சிட்டிகை கேசரி பவுடர் கரைத்துச் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment