தேவையானவை: அரிசி (ரவை போல் உடைத்தது) - 200 கிராம், புளி ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதில், ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் புளித் தண்ணீர் விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், உப்பு சேர்த்து, ரவையைத் தூவிக் கிளறி, பாத்திரத்தை குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: புளிப்பு - காரம் காம்பினேஷன் ருசியில் அசத்தலாக இருக்கும் இந்த பொங்கல். சூடாக சாப்பிட்டால்... சுவை சூப்பரோ சூப்பர்!
குறிப்பு: புளிப்பு - காரம் காம்பினேஷன் ருசியில் அசத்தலாக இருக்கும் இந்த பொங்கல். சூடாக சாப்பிட்டால்... சுவை சூப்பரோ சூப்பர்!
No comments:
Post a Comment