Sunday, July 21, 2013

ரச பொடி

தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - -----------ஒரு கப்
தனியா - ----------- 3 கப்
துவரம் பருப்பு - --------- 1/2கப்
மிளகு --------- அரை கப்
சீரகம் - ------------ஒன்றறை கப்
கட்டிவிரளி மஞ்சள் - 4

செய்முறை:
விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.
தனியா, துவரம் பருப்பு,மிளகு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை
வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.
வறுக்க வேண்டாம்
வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.

No comments:

Post a Comment